சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.17 லட்சம் முறைகேடு புகார்2 அதிகாரிகள் பதவி விடுவிப்பு

Added : அக் 03, 2021
Share
Advertisement
திருநெல்வேலி--திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஒன்றியம் கஸ்துாரிரெங்கபுரம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நிதியை முறைகேடாக அனுப்பியது தொடர்பாக இரு அதிகாரிகள் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.கஸ்துாரிரெங்கபுரம் ஊராட்சியில் குடிநீர் பைப் லைன் பணிகள் மேற்கொள்ள காண்ட்ராக்ட் விடப்பட்டிருந்தது. பணிகள் துவங்கும் முன்பே காண்ட்ராக்டர் இசக்கிமுத்து வங்கி கணக்கிற்கு

திருநெல்வேலி--திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஒன்றியம் கஸ்துாரிரெங்கபுரம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நிதியை முறைகேடாக அனுப்பியது தொடர்பாக இரு அதிகாரிகள் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

கஸ்துாரிரெங்கபுரம் ஊராட்சியில் குடிநீர் பைப் லைன் பணிகள் மேற்கொள்ள காண்ட்ராக்ட் விடப்பட்டிருந்தது. பணிகள் துவங்கும் முன்பே காண்ட்ராக்டர் இசக்கிமுத்து வங்கி கணக்கிற்கு ரூ11 லட்சத்து 74 ஆயிரத்து 688, காண்ட்ராக்டர் சுப்பையா வங்கி கணக்கிற்கு ரூ 5 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் நிதி ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது. இதுகுறித்து சப் கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி விசாரணை நடத்தினார்.

இதையடுத்து ராதாபுரம் பி.டி.ஓ.,லயோலாதாஸ், ஏ.பி.டி.ஓ., சங்கரன் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு புதிய பணியிடங்கள் வழங்கப்படவில்லை.அவர்களுக்கு பதிலாக சீனிவாசமுத்து, பரத் ஆகியோரை நியமித்து கலெக்டர் விஷ்ணு பிறப்பித்தார். இதே பிரச்னையில் கஸ்துாரிரங்கபுரம் ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியன் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X