பொது செய்தி

தமிழ்நாடு

புத்தக கண்காட்சியில் பிரதமர் குறித்து விமர்சனம்; பா.ஜ.,-கம்யூ., வாக்குவாதம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி ஆயிரவைசிய ஜவுளி வியாபாரிகள்மகாலில், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து 35-வது தேசிய புத்தக கண்காட்சியை நடத்தி வருகின்றனர்.'காந்தியம் பேசுவோம்' என்ற தலைப்பில், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் சேகரன் தலைமையில் விழா நடந்தது. அப்போது நாளிதழில் காந்தியின்

பரமக்குடி : பரமக்குடி ஆயிரவைசிய ஜவுளி வியாபாரிகள்மகாலில், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து 35-வது தேசிய புத்தக கண்காட்சியை நடத்தி வருகின்றனர்.

'காந்தியம் பேசுவோம்' என்ற தலைப்பில், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் சேகரன் தலைமையில் விழா நடந்தது. அப்போது நாளிதழில் காந்தியின் புகைப்படம் சிறிய அளவிலும், பிரதமர்மோடியின் படம் பெரியதாக வந்துள்ளதாக கூறியதுடன், பா.ஜ., அரசு அராஜகமாக நடக்கிறது என, பேசி உள்ளனர்.

புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்த பா.ஜ., ஒன்றிய செயலாளர் அருள்மணி, பிரதமரை ஏன் அவதுாறாக பேசுகிறீர்கள்,என கேட்டுள்ளார். தொடர்ந்து பா.ஜ.,வைச் சேர்ந்த சிலர் கண்காட்சி நடந்த இடத்திற்கு வந்ததால், கம்யூ., மற்றும் பா.ஜ.,வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பரமக்குடி டி.எஸ்.பி., வேல்முருகன் மற்றும் போலீசார் சமாதானம் செய்ததின் பேரில் கலைந்து சென்றனர். மாநில செயலாளர் ஜெயகுரு, கம்யூ., நிர்வாகி போஸ் மற்றும் சிலர் மீது டவுன் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.இதேபோல் கம்யூ., நகர் செயலாளர் பெருமாள்,பா.ஜ., நிர்வாகிகள் அருள்மணி, புருசோத்தமன், ஜெயகுரு மீது, கருத்தரங்கம் நடக்கும்போது குறுக்கீடு செய்ததாக புகார் தெரிவித்துள்ளார்.பரமக்குடி எஸ்.ஐ., குமரேசன் விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X