அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சியை கபளீகரம் செய்யும் அமைச்சர்கள்:

Added : அக் 03, 2021
Share
Advertisement
திருநெல்வேலி-ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்டம்தோறும் மூன்று, நான்கு அமைச்சர்கள் முகாமிட்டு கபளீகரம் செய்கின்றனர், என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.முன்னதாக அவர் நெல்லையில்

திருநெல்வேலி-ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்டம்தோறும் மூன்று, நான்கு அமைச்சர்கள் முகாமிட்டு கபளீகரம் செய்கின்றனர், என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.முன்னதாக அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டத்திலும் மூன்று, நான்கு அமைச்சர்கள் முகாமிட்டிருப்பதால் அவர்களுக்கு கீழே பணியாற்றும் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியாது. தேர்தல் விதிமுறை மீறல்களும் பணப்பட்டுவாடாவும் நடக்கிறது. ஊராட்சிகளை தி.மு.க.,அமைச்சர்கள் கபளீகரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

தி.மு.க., வினரின் வெற்றி வாய்ப்புக்கு நுாறு, இருநுாறு ஓட்டுகள் குறைந்திருந்தால் அவர்களை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும் என அமைச்சர்கள் வாக்குறுதி யளித்துள்ளனர். இவைகளால் தமிழகத்தில் தேர்தல் நியாயமாக நடக்காது என தெரிகிறது.தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 300 நாட்களாக அதிகரிக்க வேண்டும். சென்னையில் நடந்த சுவாதி கொலையில் உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும். ராம்குமார் இறப்பு குறித்து மறு விசாரணை நடத்த வேண்டும். தென் மாவட்ட பள்ளி மாணவர்களிடையே ஜாதிய மோதல் அதிகரித்து உள்ளது.

மாணவர்களிடையே இந்தியர் என்ற உணர்வை ஏற்படுத்தவேண்டுமே தவிர திராவிடன் என்பன போன்ற இனப்பாகுபாட்டுடன் கட்சிகள் செயல்படுவதால் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.திராவிடம் என்னும் கோடாரிதான் மக்களை வெட்டி பிளவுபடுத்துகிறது. திராவிட சிந்தனை களையப்பட வேண்டும். திராவிடம் என்னும் விஷச்செடிகள் அகற்றப்படவேண்டும். தேசஉணர்வு அதிகரிக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X