அரசியல் செய்தி

தமிழ்நாடு

அண்ணாமலை என்ன கடவுளா? பா.ஜ., மாவட்ட தலைவர் அதிரடி!

Added : அக் 03, 2021
Share
Advertisement
விழுப்புரம்-'அண்ணாமலை என்ன கடவுளா' என பா.ஜ., மாவட்ட தலைவர் பேசியது, அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விழுப்புரம் மாவட்ட பா.ஜ., தலைவர் கலிவரதன். இவரை, அக்கட்சியைச் சேர்ந்த மாவட்ட துணை தலைவர் ஜெயலட்சுமியின் கணவர் நாகப்பன், மொபைல் போனில் சில தினங்களுக்கு முன் தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது, 20 பெண்கள் மற்றும் பா.ம.க.,வினர் 50க்கும் மேற்பட்டோரை, திருமண

விழுப்புரம்-'அண்ணாமலை என்ன கடவுளா' என பா.ஜ., மாவட்ட தலைவர் பேசியது, அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்ட பா.ஜ., தலைவர் கலிவரதன். இவரை, அக்கட்சியைச் சேர்ந்த மாவட்ட துணை தலைவர் ஜெயலட்சுமியின் கணவர் நாகப்பன், மொபைல் போனில் சில தினங்களுக்கு முன் தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது, 20 பெண்கள் மற்றும் பா.ம.க.,வினர் 50க்கும் மேற்பட்டோரை, திருமண விழாவிற்கு வரும் அண்ணாமலை முன்னிலையில், பா.ஜ.,வில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.அதற்கு பதிலளித்த கலிவரதன், 'அண்ணாமலையும் வரமாட்டாரு, திருவண்ணாமலையும் வராது' என்றார். அதற்கு நாகப்பன், 'பசங்க ஆசைப்படுகின்றனர்' என தெரிவித்தார்.பதில் அளித்த கலிவரதன், 'அவங்க கேட்பதற்காக நாம் செய்ய முடியாது. பதவிக்கு மரியாதை கொடுங்கள். நான் வந்தால் தான் கட்சியில் சேரணும். அண்ணாமலை என்ன கடவுளா. உனக்கு நான் கடவுளா, அவர் கடவுளா.'அப்பறம் ஏன் அண்ணாமலையை கூப்பிட்டு வா, திருவண்ணாமலையை கூப்பிட்டு வான்னு சொல்லிட்டு உட்கார்ந்திருக்கீங்க. என் தலைமையில் கட்சியில் சேரச் சொல்லுங்க. என்னைவிட பெரிய ஆளு யாரும் கிடையாது' என்றார்.இருவரும் பேசிய ஆடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து, கலிவரதனை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'நான் எதையும் போனில் பேச விரும்பவில்லை' எனக் கூறி, அழைப்பை துண்டித்து விட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X