சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிழற்கூரை அமைக்க பொதுமக்கள் மறியல்

Added : அக் 03, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகா பெருமாள்புதுாரில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இங்கிருந்து தினமும், பல நுாறு பேர் பல்வேறு பணிகளுக்காகவும், பள்ளி நடக்கும் நாட்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் உடுமலை, பழநி, பொள்ளாச்சி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்சில் சென்று திரும்புகின்றனர். அங்கு, பஸ்சுக்கு காத்திருக்கும் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லை.

இந்நிலையில், நேற்று பெருமாள்புதுார் பகுதி பொதுமக்கள் திரண்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், அரசு பஸ் சிறை பிடிக்கப்பட்டது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'அண்ணாநகர் பஸ் ஸ்டாப்பில், நிழற்கூரையின்றி திறந்த வெளியில் காத்திருந்து மழையில் நனைகிறோம். வெயிலில் காய்கிறோம். இங்கு நிழற்கூரை அமைக்க வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் சாலை மறியலில் ஈடுபட்டோம்' என்றனர்.சிறிது நேரத்தில், அங்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சமரசம் பேசியதை தொடர்ந்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X