அரசியல் செய்தி

தமிழ்நாடு

'டெங்கு' பரவலை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Added : அக் 03, 2021
Share
Advertisement
கம்பம்--''வடகிழக்கு பருவமழை துவங்க இருப்பதால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுத்து 'டெங்கு' காய்ச்சல் பரவலை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.தேனி மாவட்டம் கம்பம், தேவதானப்பட்டி தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்த பின் அவர் கூறியதாவது:செப்.12ல் நடைபெற்ற முதல் முகாமில்
 'டெங்கு' பரவலை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கம்பம்--''வடகிழக்கு பருவமழை துவங்க இருப்பதால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுத்து 'டெங்கு' காய்ச்சல் பரவலை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் கம்பம், தேவதானப்பட்டி தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்த பின் அவர் கூறியதாவது:செப்.12ல் நடைபெற்ற முதல் முகாமில் தமிழகத்தில் 28 லட்சம் பேர், 2வது முகாமில் 16 லட்சம் பேர், மூன்றாவது முகாமில் 26 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தினர். இன்றைய (நேற்று) 4வது முகாமில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.தமிழகம் முழுவதும் 19 மாவட்டங்களில் மாவட்ட மருத்துவமனை தொடர்பான பிரச்னை உள்ளது. ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும் தங்கள் தொகுதிக்குள் அமைய வேண்டும் என விரும்புகின்றனர். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வர மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கேரளா நிபா, ஜிகா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை துவங்க இருப்பதால்டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது, என்றார்.முன்னதாக எல்லைப்பகுதியான தேனி மாவட்டம் குமுளியில் ஆய்வு செய்த அமைச்சர் கேரளாவில் இருந்து தமிழகம் வருவோரிடம் 2 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றை சரிபார்த்து அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வருவாய், வனத்துறையிடம் பேசி குமுளியில் விரைவில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும் என்றார்.சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:தமிழகத்தில் 62 சதவீதம், சிவகங்கை மாவட்டத்தில்54 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.கர்நாடகா எல்லைப்பகுதியான வெங்களூர் வழியாக காய்கறி வாகனங்களில் குட்கா கடத்தல் நடைபெறுவதைத் தடுக்கபோலீசார், உள்ளாட்சிதுறை, மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X