திருப்புல்லாணி கோயிலில் பராமரிப்பில்லாத மண்டகப்படி கட்டடம் புதுப்பொலிவு பெறுமா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புல்லாணி கோயிலில் பராமரிப்பில்லாத மண்டகப்படி கட்டடம் புதுப்பொலிவு பெறுமா

Added : அக் 03, 2021
Share
திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் முன்புறம் உள்ள சக்கரத்தீர்த்த குளத்தின் அருகே பழமையான மண்டகப்படி கட்டடம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.திருப்புல்லாணி வீரத் தளவாய் வெள்ளையன் சேர்வை வரலாற்று மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ரெ.வை.ரெத்தினகுமார் கூறியதாவது:பங்குனி, சித்திரை மாதங்களில் திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் தேரோட்டம்

திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் முன்புறம் உள்ள சக்கரத்தீர்த்த குளத்தின் அருகே பழமையான மண்டகப்படி கட்டடம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

திருப்புல்லாணி வீரத் தளவாய் வெள்ளையன் சேர்வை வரலாற்று மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ரெ.வை.ரெத்தினகுமார் கூறியதாவது:பங்குனி, சித்திரை மாதங்களில் திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் தேரோட்டம் நடப்பது வழக்கமாகும்.அதனை முன்னிட்டு வீதியுலா புறப்பாடு ஒன்று முதல் பத்து நாட்களுக்கு விமரிசையாக மண்டகப்படி முன் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்துள்ளது.

காலப்போக்கில் மண்டகப்படி மண்டபங்கள் சேதம் அடைந்துஉள்ளதால் சம்பந்தப்பட்ட மண்டகப்படி விழா நடப்பது இல்லை.கடந்த ஆண்டு வெள்ளையன் சேர்வை வரலாறு மீட்பு குழுவின்மூலமாக 8ம் நாள் மண்டகப்படி புதுப்பிக்கப்பட்டு ஆகமவிதிப்படி புதுப் பொலிவு பெற்றது. அங்கே உற்சவமூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தற்போதுள்ள இரண்டாம்நாள் மண்டகப்படி கட்டடம் சேதம் அடைந்துஉள்ளதால் அதனை பழமை மாறாமல் புதுப்பித்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர இந்து சமய அறநிலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X