பொது செய்தி

தமிழ்நாடு

7 பேருக்கு வாழ்வு தந்த குடும்பத் தலைவி

Added : அக் 03, 2021
Share
Advertisement
மதுரை-மதுரையைச் சேர்ந்த 23 வயது குடும்பத் தலைவி மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உறுப்புகள் மூலம் ஏழு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர், கார் டிரைவர் காசி; மனைவி கார்த்திகா, 23.மூன்று நாட்களுக்கு முன் கார்த்திகாவுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்ட நிலையில், மீனாட்சி மிஷன் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மூளை நரம்பியல்

மதுரை-மதுரையைச் சேர்ந்த 23 வயது குடும்பத் தலைவி மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உறுப்புகள் மூலம் ஏழு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர், கார் டிரைவர் காசி; மனைவி கார்த்திகா, 23.மூன்று நாட்களுக்கு முன் கார்த்திகாவுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்ட நிலையில், மீனாட்சி மிஷன் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மூளை நரம்பியல் மருத்துவர் மேற்பார்வையில் பரிசோதனைகள் செய்யப்பட்டன. நேற்று முன்தினம், கார்த்திகாவின் மூளை நிரந்தரமாக செயல் இழந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

கார்த்திகாவின் நிலையை அவரது கணவரிடம் மருத்துவ குழுவினர் எடுத்து கூறி, உடலுறுப்பு தானம் குறித்து விவரித்தனர்.கணவர் சம்மதிக்கவே, ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் இதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இரு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் திருச்சிக்கும், இதயம், நுரையீரல் சென்னைக்கும், கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X