பொது செய்தி

தமிழ்நாடு

புலி சுட்டு கொல்லப்பட மாட்டாது வன உயிரின பாதுகாவலர் உறுதி

Added : அக் 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கூடலுார்- -''மசினகுடியில் தேடப்படும் புலி சுட்டு கொல்லப்பட மாட்டாது,'' என, தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலையில், சமீபத்தில் நான்கு பேரை புலி அடித்து கொன்றுள்ளது. மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, புலியை வேட்டையாட வனத்துறை உத்தரவிட்டது.வனத் துறையினருடன், தமிழக அதிரடிப்படை மற்றும் நக்சல் தடுப்பு

கூடலுார்- -''மசினகுடியில் தேடப்படும் புலி சுட்டு கொல்லப்பட மாட்டாது,'' என, தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலையில், சமீபத்தில் நான்கு பேரை புலி அடித்து கொன்றுள்ளது. மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, புலியை வேட்டையாட வனத்துறை உத்தரவிட்டது.வனத் துறையினருடன், தமிழக அதிரடிப்படை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும், மசினகுடி பகுதியில் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மசினகுடியில் புலியை பிடிக்கும் பணிகள் குறித்து, முதன்மை தலைமை வன உயிரின காப்பாளர் சேகர்குமார் நீரஜ் நேற்று வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை டாக்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.அவர் கூறுகையில், ''எக்காரணத்தைக் கொண்டும், புலி சுட்டு கொல்லப்பட மாட்டாது; உயிருடன் பிடிப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது. அதற்கான பணிகளில் கால்நடை டாக்டர்கள், வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், ''புலியை தேடும் பணியில், மூன்று ட்ரோன் கேமராக்கள், 10 தெர்மல் கேமராக்கள், 60 தானியங்கி கேமராக்கள், 20 டிஜிட்டல் வாக்கி டாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேடுதல் பணியில், பல குழுக்கள் ஈடுபட்டு உள்ளன,'' என்றார்.புலியை பிடிக்க களமிறங்கிய 'அதவை'புலியை பிடிக்க, 'அதவை' என்ற எட்டு மாத நாட்டு பெண் சிப்பிப்பாறை நாய் களம் இறக்கப்பட்டுள்ளது.

63.5 செ.மீ., உயரமும், எலும்பும் தோலுமாக உள்ள உடல் அமைப்பும், பாய்ந்து விலங்குகளை விரட்ட உதவும்,இதன் பிறப்பிடம், விருதுநகர் மாவட்டம், சிப்பிப்பாறை என்பதால் அப்பெயர் பெற்றது. புலிகளை பார்த்து பயப்படாமல் சண்டையிடும் அளவு வீரமிக்கது. மணிக்கு 60 கி.மீ., ஓடும் இது, உலகின் அதிவேகமாக ஓடும் நாய்களில் ஒன்று.நீலகிரியில், 'காளிங்கன்' கூடலுாரில், 'அதவை' சிப்பிப்பாறை நாய்கள் வனக் குற்றத் தடுப்பில் ஈடுபடுகின்றன.சந்தன கடத்தல், யானை இறப்பு சம்பவத்தில் குற்ற வாளிகளை அதவை கண்டுபிடித்தது. தற்போது, மசினக்குடியில் புலியை தேட, அதவை முதல் முறையாக களம் இறக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
04-அக்-202113:26:39 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan மனித உயிர் முக்கியமா புலி உயிர் முக்கியமா
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
04-அக்-202112:59:18 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan மனித உயிர் போகிறது. அந்த புளியை சுட்டு தள்ளுங்கள். தவறில்லை. புளியை உயிரோடு பிடிக்க முயற்சிப்பது முட்டாள்தனம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X