பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு

Added : அக் 03, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படஉள்ளதால், அந்தந்த பள்ளிகளில் மாணவர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் கூறியிருப்பது:பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளியில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி

ராமநாதபுரம் : பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படஉள்ளதால், அந்தந்த பள்ளிகளில் மாணவர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் கூறியிருப்பது:பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளியில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடக்க உள்ளது.மாணவர்கள் தங்களின் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு, அலைபேசிஎண், மின்னஞ்சல் முகவரிஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளில் பள்ளிக்கு வர வேண்டும்.

அக்.18 வரை வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளில் நடக்கிறது. பதிவு நடைபெறும் 15 நாட்களுக்கும்மதிப்பெண் சான்று வழங்கப்படும் முதல் நாளான அக்.4 பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.மேலும், https:/tnvelaivaaippu.gov.in/ என்ற வேலைவாய்ப்புத்துறை இணையதளம் மூலமும்பதிவு செய்யலாம். மாணவர்கள் இந்த வசதியை பயன்படுத்த வேண்டும்.மேலும் பதிவு செய்ய வரும் மாணவர்கள் அரசு விதிப்படி முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X