பொது செய்தி

தமிழ்நாடு

ராஜா உடல் அடக்கம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
சேலம்-முன்னாள் எம்.எல்.ஏ., வீரபாண்டி ராஜா உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.சேலத்தைச் சேர்ந்த, மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், தி.மு.க., தேர்தல் பணிக்குழு செயலருமான ராஜா, நேற்று முன்தினம், அவரது பிறந்த நாளிலேயே மாரடைப்பால் உயிரிழந்தார்.அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை

சேலம்-முன்னாள் எம்.எல்.ஏ., வீரபாண்டி ராஜா உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.சேலத்தைச் சேர்ந்த, மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், தி.மு.க., தேர்தல் பணிக்குழு செயலருமான ராஜா, நேற்று முன்தினம், அவரது பிறந்த நாளிலேயே மாரடைப்பால் உயிரிழந்தார்.அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை தொண்டர்கள் புடைசூழ, மலர்களால் உதயசூரியன் சின்னம் போல் அலங்கரிக்கப்பட்ட லாரியில், ராஜா உடல் ஏற்றப்பட்டு, பூலாவரி வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அவரது குடும்பத்தினரின் தோட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஆறுமுகம், அவரது மனைவி ரங்கநாயகி, மூத்த மகன் செழியன் ஆகியோரின் சமாதி அருகே, ராஜா உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X