பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : அக் 03, 2021
Share
Advertisement
பசுவை காப்பாற்ற முயன்றவர் பலிஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர், கூலி தொழிலாளி செல்வரசு, 29; மனைவி ஜெயசக்தி, 25; எட்டு மாத கர்ப்பிணி. 2 வயதில் மகன் உள்ளார்.செல்வராசு, அவருக்கு சொந்தமான பசு மாட்டை வீட்டின் வெளியே கட்டி வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. வீட்டின் முன் மின் கம்பி அறுந்த விழுந்ததில்,

பசுவை காப்பாற்ற முயன்றவர் பலி

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர், கூலி தொழிலாளி செல்வரசு, 29; மனைவி ஜெயசக்தி, 25; எட்டு மாத கர்ப்பிணி. 2 வயதில் மகன் உள்ளார்.செல்வராசு, அவருக்கு சொந்தமான பசு மாட்டை வீட்டின் வெளியே கட்டி வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. வீட்டின் முன் மின் கம்பி அறுந்த விழுந்ததில், பசு மாடு சிக்கி, கத்தியது. செல்வராசு மாட்டைக் காப்பாற்ற முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கி செல்வராசு இறந்தார்; பசுவும் பலியானது.

கல்லுாரி மாணவி கர்ப்பம்: இருவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கூரம்பட்டியைச் சேர்ந்தவர் கதிர், 22; பாலேகுளியைச் சேர்ந்தவர் பெரியவேடி, 22; கூலித் தொழிலாளிகளான இருவரும் நண்பர்கள். இருவரும், கல்லுாரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவி ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.இதில், மாணவி மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். மாணவி புகார்படி, பர்கூர் அனைத்து மகளிர் போலீசார், கதிர், பெரியவேடி இருவரையும் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.

காட்டுப்பன்றிகள் தாக்கி விவசாயி சாவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, கெம்ரேதொட்டியைச் சேர்ந்தவர் சிவமாதேவா, 44; விவசாயி. இவர், கர்நாடக எல்லையிலுள்ள தன் விவசாய நிலத்தில் ராகி சாகுபடி செய்திருந்தார். தோட்டத்துக்கு நேற்று முன்தினம் இரவு காவலுக்கு சென்றார்.அவரது நிலத்துக்கு வந்த காட்டுப் பன்றிகள் கூட்டத்தை விரட்ட முயன்றபோது, அவை தாக்கி படுகாயம் அடைந்தார். தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மின்னல் தாக்கி 14 ஆடுகள் பலி

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம் குரும்பலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகவள்ளி, 30; ௧௦௦க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, மொட்ட மலை அடிவார தரிசு நிலங்களில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.அப்போது, இடியுடன் பலத்த மழை பெய்த தால், ஆடுகளுடன் வீடு திரும்பினார். நேற்று காலை 10க்கும் மேற்பட்ட ஆடுகளைக் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த ஆறுமுகவள்ளி, முதல் நாள் ஆடு மேய்த்த இடத்திற்கு சென்று பார்த்தார். அங்கே, மின்னல் தாக்கி பாறை ஒன்று பிளந்து கிடந்தது. அதனருகே 14 ஆடுகள் இறந்து கிடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X