பொது செய்தி

தமிழ்நாடு

தென் சிங்கம்புணரியில் மறுகால் பாயும் கண்மாய்கள்

Added : அக் 04, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே மணிமுத்தாறு தண்ணீரால் கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.மதுரை மாவட்டம் மேலுார் பகுதிக்கு திறக்கப்பட்ட பெரியாறு கால்வாய் தண்ணீர் அப்பகுதி கண்மாய்களை நிரப்பி திருமணிமுத்தாறில் மறுகால் பாய்கிறது. இந்த ஆறு சிங்கம்புணரி ஒன்றியம் எருமைப்பட்டி, மாம்பட்டி வழியாக உப்பாறு என்ற பெயரில் ஏரியூர் பெரிய

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே மணிமுத்தாறு தண்ணீரால் கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலுார் பகுதிக்கு திறக்கப்பட்ட பெரியாறு கால்வாய் தண்ணீர் அப்பகுதி கண்மாய்களை நிரப்பி திருமணிமுத்தாறில் மறுகால் பாய்கிறது. இந்த ஆறு சிங்கம்புணரி ஒன்றியம் எருமைப்பட்டி, மாம்பட்டி வழியாக உப்பாறு என்ற பெயரில் ஏரியூர் பெரிய கண்மாயில் பாய்கிறது. இடைப்பட்ட பகுதியில் பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி வழிகிறது.விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பலர் விதைப்பு நடவுப் பணிகளை துவக்கியுள்ளனர். ஒப்பிலான்பட்டி உள்ளிட்ட இடங்களில் பாலத்துக்கு அடியில் வலைகளால் மீன்களை மக்கள் பிடிக்கின்றனர்.ஏரியூர் கண்மாய்க்கு சென்ற தண்ணீர் அங்கும் நிரம்பி மறுகால் பாய்கிறது. அதேநேரம் சிங்கம்புணரியின் தெற்கு ஒன்றியப்பகுதி பெரியாறு கால்வாய்களில் தண்ணீர் வராததால் பெரும்பாலான கண்மாய்கள் வறண்டு காணப்படுகிறது.

எனவே திருப்புத்துார் தொகுதியில் சமநிலை விவசாய வளர்ச்சிக்கு உதவும் வகையில் வட சிங்கம்புணரி மற்றும் எஸ்.எஸ்.கோட்டை பகுதி பெரியாறு கால்வாய்களை உடனடியாக சீரமைத்து தண்ணீர் திறக்க அமைச்சர் பெரியகருப்பன் தலையிட வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X