சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை பேராயர் மீது நில மோசடி வழக்கு ; சபை நிலத்தை நீண்ட கால ஒத்திக்கு கொடுத்தார்

Added : ஜூலை 31, 2011 | கருத்துகள் (5)
Advertisement
land grab charge against Chennai Bishop Chinnappa, , சென்னை பேராயர் மீது நில மோசடி வழக்கு ; சபை நிலத்தை நீண்ட கால ஒத்திக்கு கொடுத்தார்

சென்னை: சென்னையில் கத்தோலிக்க உயர் மறை மாவட்ட பிஷப் சின்னப்பா மற்றும் ஜேப்பியார், எம்.ஜி.எம்., கம்பெனி நிர்வாகத்தினர் மீது போலீசார் நிலமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் போக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல்வாதிகள் மட்டுமே இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு வந்த நேரத்தில் பிஷப் மீது பதிவான இந்த வழக்கு காரணமாக மறை மாவட்ட சமூக மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 1919 ம் ஆண்டில் வாழ்ந்தவர் டி. மாண்டி. இவர் போர்ச்சூக்கிய நாட்டை சேர்ந்தவர். இவர் தனக்கு சொந்தமான ( ராஜா அண்ணாமலை புரம் ) இடங்களை கத்தோலிக்க சபைக்கு உயில் எழுதி , இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை ஏழை மக்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் இந்த ஆவணத்தில் கூறியுள்ளார். இந்த நிலங்கள் சபையின் விதிமுறைக்கு புறம்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மோசடி ஆகும். அதாவது எம்.ஜி.ஆர்., காலத்தில் பலம் மிக்கவராக இருந்து வந்த ஜேப்பியார், மற்றும் எம்.ஜி.எம்,. நிறுவனத்திற்கு இந்த இடங்களை 95 ஆண்டு காலம் வரை நீண்ட கால ஒத்திகைக்கு மறைமாவட்ட சபை வழங்கியுள்ளது.

இதற்கு காரணமான பிஷப் , ஜேப்பியார், குமார், லாரன்ஸ், கபீர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்பட 14 பேர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை திருவான்மியூரை சேர்ந்த தேவசகாயம் போலீசாரிடம் வழங்கினார். இதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். இதனால் போலீசார் எப்.ஐ.ஆர்., பதிந்துள்ளனர். நிலமோசடிக்கென உருவாக்கப்பட்டிருக்கும் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கத்தோலிக்க சபையை பொறுத்த மட்டில் மறைமாவட்டம் என்றும் , அந்தஸ்து கொண்ட உயர்மறைமாவட்டம் என்றும் இரு பிரிவுகள் உள்ளது. இதில் மதுரையும், சென்னையும் உயர் மறைமாவட்டம் ஆகும்.


இதற்கிடையில் இந்த நிலங்கள் தொடர்பாக ஏற்கனவே எழுந்த சர்ச்சையின் கீழ் சபைக்கு திரும்ப பெறப்பட்டுள்ளது என்று சபை தரப்பில் கூறப்பட்டாலும், ஆவணங்கள் முறையாக இன்னும் மாற்றத்திற்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக புகார் கொடுத்து வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தெரிகிறது. வழக்கு விசாரணை மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
fernando muthukumar - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஜூலை-201115:29:31 IST Report Abuse
fernando muthukumar தாம்பரம் அருள் நகர் இப்போது ரியல் ஈஸ்டடடே முலம் விற்பனைக்கு வண்டு இருக்கு இடு கிறிஸ்துவர்களுக்கு குறைந்த விலையில் கொடுக்கப்பட்டு பின் விமான படை அங்கு கட்டடம் கட்ட அனுமதிக்கல என சொல்லி திரும்ப வந்கிகொன்டர்கள். அதை வெளியே விட்ட்ருவிட்டு இப்போ விற்பனைக்கு வந்தும் இருக்கு. கோடி கொடியான சென்னை மாகான மேற்றிராசனதுக்கு சொந்தமான சொதுக்குகளை ( ராஜா அண்ணாமலை புறம், தாம்பரம், செங்கல்பட்டு, சந்தொமே, மகாபலிபுரம், போன்ற இடங்களில் இருக்கும் சொத்துக்களை வெள்ளை உடை அணிந்த இந்த சாமியார்கள் விற்று சுருட்டி விட்டார்கள். ப்ரோபெர்ட்டி கவுன்சில் என்ற பெயரில் ஒரு சுருட்டும் குட்டம்.
Rate this:
Share this comment
Cancel
appu - madurai,இந்தியா
31-ஜூலை-201115:24:12 IST Report Abuse
appu பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..ஆனால் இவர்களின் மீது எப் ஐ ஆர்,விசாரணை மட்டும் தானா?
Rate this:
Share this comment
Cancel
Anandh murali - vellore,இந்தியா
31-ஜூலை-201114:09:52 IST Report Abuse
Anandh murali இந்த நாட்ல யாருமே நல்லவங்க இல்லையா?... என்ன கொடும சார் இது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X