தமிழ்நாடு

உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தால் எந்த பயனும் இல்லை: போலீசார் குமுறல்

Added : அக் 04, 2021
Share
Advertisement
காரைக்குடி : உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நடக்கும் போலீஸ் குறைதீர் முகாமினால் எவ்வித பயனும் இல்லை என்றும்,நேரடியாக டி.ஜி.பி.,க்கு மனுக்கள் அனுப்பினால் மட்டுமே குறைகள் களைய வாய்ப்பிருப்பதாக போலீசார் கருத்து தெரிவிக்கின்றனர்.தமிழகம் முழுவதும் உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் போலீசார் குறைகளை களைய முகாம் நடக்கிறது. சிவகங்கை
 உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தால் எந்த பயனும் இல்லை: போலீசார் குமுறல்

காரைக்குடி : உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நடக்கும் போலீஸ் குறைதீர் முகாமினால் எவ்வித பயனும் இல்லை என்றும்,நேரடியாக டி.ஜி.பி.,க்கு மனுக்கள் அனுப்பினால் மட்டுமே குறைகள் களைய வாய்ப்பிருப்பதாக போலீசார் கருத்து தெரிவிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் போலீசார் குறைகளை களைய முகாம் நடக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் மூலம் நடந்தது.அக்.30க்கு முன்னதாக குறைதீர் முகாம்களில் வழங்கப்படும் மனுவை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற முகாம்களால் தங்களது குறைகள் எதுவும் களையப்பட வாய்ப்பில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர். முகாம்களில் கலந்து கொள்வதற்கு முதல்நாள் மனு கொடுக்க சொல்கின்றனர். முகாம் அன்று எங்கே பணி இருக்கும் என்று தெரியாததால் முகாமிற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

மேலும், இதற்கு முன் நடந்த முகாம்களில் கொடுத்த பல மனுக்களுக்கு தீர்வே கிடைக்கவில்லை. மனுகொடுக்க சென்றால், ஷூ சரியில்லை, சீருடை சரியில்லை என்று எச்சரித்து திருப்பி அனுப்புகின்றனர். பெண் போலீசாரும் நேரடியாக முகாம்களில் கலந்து கொள்ளவும், மனு கொடுக்கவும் தயங்குகின்றனர்.

மாறாக முதலமைச்சர் தனிப்பிரிவு போன்று, டி.ஜி.பி.,க்கு நேரடியாக மனுக்கள் சென்றடைந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும். குறிப்பிட்ட தினங்களுக்குள் மனுக்களை மெயில் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுத்தால் அனைவரும் மனுக்களை எளிதாக அனுப்ப முடியும்.டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து மனுக்களுக்கு எண்கள் வழங்கி அதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பினால் மட்டுமே குறை நிச்சயம் களையப்படும்.

எனவே, முகாம்களை கண்துடைப்பாக நடத்தப்படாமல் போலீசாரின் பிரச்னைகளை களைவதற்காக நடத்தப்பட வேண்டும் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X