பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புத்துாரில் மாறிய பையை பணத்துடன் திருப்பி தந்த பெண்

Added : அக் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துாரில் பையை மாற்றி எடுத்து சென்ற பெண்ணின் பையை, மற்றொரு பெண் போலீசார் உதவியுடன் ஒப்படைத்தார்.திருப்புத்துார் உசேன் அம்பலம் நகரைச் சேர்ந்தவர் அனிதா. இவர் நேற்று காலை மதுரை செல்வதற்காக திருப்புத்துார் பஸ் ஸ்டாண்ட் வந்தார்.அருகிலுள்ள கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு பஸ்சில் ஏறிவிட்டார். அதே கடையில் அருகில் நின்ற கண்டரமாணிக்கத்தைச்
 திருப்புத்துாரில் மாறிய பையை பணத்துடன் திருப்பி தந்த பெண்

திருப்புத்துார் : திருப்புத்துாரில் பையை மாற்றி எடுத்து சென்ற பெண்ணின் பையை, மற்றொரு பெண் போலீசார் உதவியுடன் ஒப்படைத்தார்.

திருப்புத்துார் உசேன் அம்பலம் நகரைச் சேர்ந்தவர் அனிதா. இவர் நேற்று காலை மதுரை செல்வதற்காக திருப்புத்துார் பஸ் ஸ்டாண்ட் வந்தார்.அருகிலுள்ள கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு பஸ்சில் ஏறிவிட்டார். அதே கடையில் அருகில் நின்ற கண்டரமாணிக்கத்தைச் சேர்ந்த ஜீவிதா என்பவர் தனது பையை எடுக்க பார்த்த போது அனிதா இவரது பேக்கை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

இருபைகளும் ஒரே போன்று இருந்ததால் இந்த குழப்பம்.ஜீவிதா பஸ் ஸ்டாண்டில் நின்ற டிராபிக் ஏட்டு மலையரசு விடம் அனிதாவின் பையை ஒப்படைத்தார். போலீசார் பையை பார்வையிட்ட போது அதில் ரூ 36 ஆயிரம் இருந்தது தெரிந்தது.அதில் கிடைத்த ஒரு அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டார்.

மதுரை பஸ்சில் ஏறிய அனிதாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.அடுத்த நிறுத்தத்தில் இறங்கி அனிதா ஸ்டேஷனுக்கு வந்தார். அவரிடம் இன்ஸ்பெக்டர் சேது, டிராபிக் எஸ்.ஐ.,முத்துராமலிங்கம் ஆகியோர் பணத்துடன் பையை ஒப்படைத்தனர்.அனிதாவும் மாற்றி எடுத்த பையை ஜீவிதாவிடம் ஒப்படைத்து நன்றி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
04-அக்-202119:30:18 IST Report Abuse
Vittalanand தமிழ் நாட்டில் 2 திருப்பர்த்துர் மாற்றிக்குவோருவதிருப்பட்டூர் உள்ளன.வ எனவே எந்த திருப்பத்தூர் யவ்ன்று பதிவிட்டால் நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X