பொது செய்தி

இந்தியா

மூத்தோர் உதவி மையத்துக்கு குவியும் அழைப்புகள்

Added : அக் 04, 2021
Share
Advertisement
புதுடில்லி-மூத்த குடிமக்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட தேசிய உதவி எண்ணிற்கு, கடந்த மே மாதம் முதல் 3.39 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன. மூத்த குடிமக்களுக்காக மே மாதம், 'எல்டர்லைன்' எனப்படும் தேசிய உதவி எண்ணை, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அறிமுகம் செய்து வைத்தது. அந்த உதவி எண்ணை தொடர்பு கொண்டு உதவி பெற்றவர்கள் குறித்த விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டு

புதுடில்லி-மூத்த குடிமக்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட தேசிய உதவி எண்ணிற்கு, கடந்த மே மாதம் முதல் 3.39 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன.

மூத்த குடிமக்களுக்காக மே மாதம், 'எல்டர்லைன்' எனப்படும் தேசிய உதவி எண்ணை, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அறிமுகம் செய்து வைத்தது. அந்த உதவி எண்ணை தொடர்பு கொண்டு உதவி பெற்றவர்கள் குறித்த விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்த எல்டர்லைன் உதவி எண்ணிற்கு மே முதல், மூன்று லட்சத்து 39 ஆயிரத்து 879 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.இதில் உத்தர பிரதேசத்தில் இருந்து அதிகபட்சமாக, 79 ஆயிரத்து 542 அழைப்புகள் வந்துள்ளன.

உத்தரகண்டில் இருந்து, 54 ஆயிரத்து 432; தெலுங்கானாவில் இருந்து, 42 ஆயிரத்து 610; தமிழகத்தில் இருந்து, 27 ஆயிரத்து 708; கர்நாடகாவில் இருந்து, 22 ஆயிரத்து 711 அழைப்புகளும் வந்துள்ளன.இந்த எண்ணில் பெண்களை விட ஆண்களே அதிகமாக அழைத்துப் பேசி உள்ளனர். கொரோனா தொடர்பாக கேட்டறிய, 13 ஆயிரத்து 496 அழைப்புகள் வந்துள்ளன. ஓய்வூதியம் குறித்து அறிய, 8,952; துன்புறுத்தல் புகார்களை தெரிவிக்க, 1,890; மருத்துவ உதவி பெற, 1,202 அழைப்புகள் வந்துள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X