பொது செய்தி

தமிழ்நாடு

மயான ஊழியரிடம் வருவாய்த்துறை விசாரணை

Added : அக் 04, 2021
Share
Advertisement
மானாமதுரை : தினமலர் செய்தி எதிரொலியாக மானாமதுரையில் டாக்டர் பட்டம் பெற்ற மயான ஊழியரிடம் அவரது வாழ்வாதாரம் குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே காலனியில் வசித்து வரும் கருத்தகாளை (எ)முருகேசன் - பஞ்சவர்ணம் தம்பதி கடந்த 30 வருடங்களுக்கும் மேல் மயானத்தில் வேலை செய்து வருகின்றனர்.இவர்களது கடைசி மகன் சங்கர் 34,பெற்றறோருக்கு

மானாமதுரை : தினமலர் செய்தி எதிரொலியாக மானாமதுரையில் டாக்டர் பட்டம் பெற்ற மயான ஊழியரிடம் அவரது வாழ்வாதாரம் குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே காலனியில் வசித்து வரும் கருத்தகாளை (எ)முருகேசன் - பஞ்சவர்ணம் தம்பதி கடந்த 30 வருடங்களுக்கும் மேல் மயானத்தில் வேலை செய்து வருகின்றனர்.இவர்களது கடைசி மகன் சங்கர் 34,பெற்றறோருக்கு உதவியாக மயானத்தில் வேலை செய்து கொண்டே படித்து எம்.எஸ்.சி., பட்ட மேற்படிப்பு முடித்து ஓவியத்தில் சாதனை படைத்ததால் இவருக்கு சென்னை சர்வதேச தமிழ் பல்கலை கழகம் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

சங்கர் தமிழக அரசு தனக்கு படிப்பிற்கேற்ற வேலை வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. இதன் எதிரொலியாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவுப்படி மானாமதுரை தாசில்தார் தமிழரசன், துணை தாசில்தார் சேகர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று அவரது சான்றிதழ்களையும், வாழ்வாதாரத்திற்கான அடிப்படை வசதி குறித்து ஆய்வு செய்து மாவட்ட கலெக்டருக்கும், அரசுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X