பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு

Added : அக் 04, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். தற்போது தென் மேற்குப்பருவமழை துவங்கியுள்ளதால் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. விவசாயிகள் நெல் விதைக்கவும், நாற்றங்கால் அமைக்கும் பணி செய்து வருகின்றனர். பயிர்களுக்கு யூரியா உரம்தேவைப்படுகிறது. தனியார்

சிவகங்கை : சிவகங்கையில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். தற்போது தென் மேற்குப்பருவமழை துவங்கியுள்ளதால் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. விவசாயிகள் நெல் விதைக்கவும், நாற்றங்கால் அமைக்கும் பணி செய்து வருகின்றனர். பயிர்களுக்கு யூரியா உரம்தேவைப்படுகிறது. தனியார் உரக்கடைகளில் யூரியா இல்லை, என தெரிவிக்கின்றனர்.

மழைக்காலம்தொடங்கும் முன்பு அனைத்து உரக்கடைகளிலும் யூரியா இருப்பு வைத்திருக்க வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தற்போது மழை பெய்ய துவங்கிய நிலையில் யூரியா இல்லை, என செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விவசாயிகளிடம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர்.

வேளாண் இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன் தெரிவித்ததாவது: மாவட்டத்தில் 800 டன் யூரியா இருப்பு உள்ளது. தனியார் கடைகளில் கிடைக்காமல் இருந்தால் சம்பந்தப்பட்ட கடையில் யூரியா கிடைக்க வழி வகை செய்யப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X