பொது செய்தி

தமிழ்நாடு

கோயில்கள் படிப்படியாக திறப்பு: அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

Added : அக் 04, 2021
Share
Advertisement
திருப்புவனம் : திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்து பேசினார்.அவர் பேசும் போது வாரத்தில் நான்கு நாட்கள் திறக்கப்பட்டுள்ள கோயில்கள் படிப்படியாக முழுமையாக திறக்கப்படும்.62சதவிகிதம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.அக். 20க்குள் 70 சதவிகிதத்தை எட்டி விடுவோம்.சுகாதார நிறுவனம் அறிவித்தபடி 70 சதவிகித

திருப்புவனம் : திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசும் போது வாரத்தில் நான்கு நாட்கள் திறக்கப்பட்டுள்ள கோயில்கள் படிப்படியாக முழுமையாக திறக்கப்படும்.62சதவிகிதம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.அக். 20க்குள் 70 சதவிகிதத்தை எட்டி விடுவோம்.சுகாதார நிறுவனம் அறிவித்தபடி 70 சதவிகித தடுப்பூசி போடப்பட்டால் 3வது அலையை எளிதில் எதிர்கொள்ளலாம்.

சிவகங்கை மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்டவர்கள் 10 லட்சத்து 71 ஆயிரத்து 700 பேர். இதில் முதல் தவணை தடுப்பூசி 6 லட்சத்து55 ஆயிரத்து 247 பேர் செலுத்தியுள்ளனர்.2ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 980 பேர் ஆகும், மாவட்டம் முழுவதும் 700 முகாம்களில் 42 ஆயிரத்து 940 தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

முகாமில் அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, எம்.எல்.ஏ.,தமிழரசி, வட்டார மருத்துவ அலுவலர் சேதுராமு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X