சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் மூழ்கி மாணவர் பலி

Added : அக் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:இடுவாய், வாசுகி நகரை சேர்ந்தவர் ஆதித்யராம், 16; பாலிடெக்னிக் மாணவர்; தனது நண்பர், கள்ளிமந்தயத்தை சேர்ந்த சூர்யாவின், 15, பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, நேற்று முன்தினம் மதியம் திருப்பூரில் இருந்து தாராபுரம் சென்றார்.இவருடன் நண்பர்கள் செல்வக்குமார், 15, அகிஷ், 15 ஆகியோரும் சென்றனர். தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்த சூர்யா, மூவரையும் அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்று

திருப்பூர்:இடுவாய், வாசுகி நகரை சேர்ந்தவர் ஆதித்யராம், 16; பாலிடெக்னிக் மாணவர்; தனது நண்பர், கள்ளிமந்தயத்தை சேர்ந்த சூர்யாவின், 15, பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, நேற்று முன்தினம் மதியம் திருப்பூரில் இருந்து தாராபுரம் சென்றார்.இவருடன் நண்பர்கள் செல்வக்குமார், 15, அகிஷ், 15 ஆகியோரும் சென்றனர். தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்த சூர்யா, மூவரையும் அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்; அப்போது, தாராபுரம் - ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள அமராவதி ஆற்றில் இறங்கி நால்வரும் குளித்தனர். எதிர்பாராத விதமாக ஆதித்யராம் சிக்கினார். மற்ற, மூவரும், மீட்க முயன்றும், முடியவில்லை.தாராபுரம் தீயணைப்பு நிலையத்தினர், இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின், ஆதித்யராமை சடலமாக மீட்டனர். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X