அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., குற்றச்சாட்டு

Added : அக் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சியின், 10வது வார்டு கவுன்சிலர் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கயம், வெள்ளகோவில் ஒன்றியங்களை உள்ளடக்கிய, இந்த வார்டில், 62 ஆயிரம் வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.மாவட்டத்தில், 55 ஊராட்சிகளில், இடைத்தேர்தல் நடக்கிறது. அப்பகுதிகளில், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் முருகேசன்,

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சியின், 10வது வார்டு கவுன்சிலர் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கயம், வெள்ளகோவில் ஒன்றியங்களை உள்ளடக்கிய, இந்த வார்டில், 62 ஆயிரம் வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.மாவட்டத்தில், 55 ஊராட்சிகளில், இடைத்தேர்தல் நடக்கிறது. அப்பகுதிகளில், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் முருகேசன், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ''தி.மு.க.,வினரின் நிர்பந்தம் காரணமாக, விவசாய கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்க, கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. ஆளும்கட்சியின் தேர்தல் நடத்தை விதிமீறலை அனுமதிக்க கூடாது.ஆளும்கட்சியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ரசீது வழங்க உள்ளனர். தேர்தல் நடத்தை விதிமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X