பொது செய்தி

தமிழ்நாடு

கிருமிநாசினி தெளிப்பு; கண்காணிப்பு இல்லை

Added : அக் 04, 2021
Share
Advertisement
அவிநாசி:தொற்று பரவல் தணிந்தாலும், இன்னும் சமூக இடைவெளி, முககவசம் அணிதலை தொடர்வது கட்டாயமாகியுள்ளது.உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில், தொற்றுப்பரவலை கட்டுக்குள் கொண்டு வர, கிருமிநாசினி தெளிப்பது தொடர்பான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, மருத்துவமனை, கிளினிக், தனியார் மருத்துவமனைகளில், ஒரு லிட்டர் லைசால் கிருமிநாசினியை, 9 லி., தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

அவிநாசி:தொற்று பரவல் தணிந்தாலும், இன்னும் சமூக இடைவெளி, முககவசம் அணிதலை தொடர்வது கட்டாயமாகியுள்ளது.உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில், தொற்றுப்பரவலை கட்டுக்குள் கொண்டு வர, கிருமிநாசினி தெளிப்பது தொடர்பான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, மருத்துவமனை, கிளினிக், தனியார் மருத்துவமனைகளில், ஒரு லிட்டர் லைசால் கிருமிநாசினியை, 9 லி., தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். ஹைப்போகுளோரைடு திரவத்தை, ஒரு லி., அளவுக்கு எடுத்து, 3 லி., தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.இக்கலவையை, மருத்துவமனை படுக்கை, மேஜை, நாற்காலி, தரை, கைப்பிடி மற்றும் அனைத்து பகுதிகளிலும், இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை துடைக்கவோ, 'ஸ்பிரே' செய்யவோ வேண்டும்.பொது இடங்கள், பஸ், சினிமா தியேட்டர், அலுவலகம், மண்டபம், வணிக வளாகம், ரயில் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஒரு லி.. லைசால் கிருமிநாசினியை, 19 லி., தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் ஹைப்போ குளோரைடு திரவத்தை, 7 லி.. தண்ணீரில் கலந்து, இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை தெளிக்கவோ, 'ஸ்பிரே' செய்யவோ வேண்டும்.வீடுகள், தனியார் வாகனங்களில், ஒரு லிட்டர் லைசால் கிருமி நாசினியை, 49 லி., தண்ணீரில் கலந்தும், ஒரு லி.. ஹைப்போ குளோரைடு திரவத்தை, 19 லி., தண்ணீரில் கலந்தும், 2 மணி நேரத்துக்கு ஒரு முறை தரை மற்றும் பொருட்களை துடைக்கவோ, ஸ்பிரே செய்யவோ வேண்டும்.தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தில் இந்த வழிகாட்டுதலை உள்ளாட்சி அமைப்புகள் சரியாக பின்பற்றி வந்தன; நாளடைவில், இத்தகைய தொற்று தடுப்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பண்டிகைக்காலம் நெருங்குவதால், இது கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X