பொது செய்தி

தமிழ்நாடு

விடுதிக்குள் மழைநீர்; மாணவியர் தவிப்பு

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021
Share
Advertisement
அவிநாசி சீனிவாசபுரத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில், அரசு மாணவியர் விடுதி செயல்படுகிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவியர் இங்கு தங்கி, அவிநாசியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கின்றனர்.கடந்த, மாதம் பெய்த பலத்த மழையில், விடுதியை ஒட்டியிருந்த ரோட்டில் பெருக்கெடுத்த வெள்ளத்தில், விடுதியின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது; விடுதிக்குள். மழைநீர்
 விடுதிக்குள் மழைநீர்; மாணவியர் தவிப்பு

அவிநாசி சீனிவாசபுரத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில், அரசு மாணவியர் விடுதி செயல்படுகிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவியர் இங்கு தங்கி, அவிநாசியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கின்றனர்.கடந்த, மாதம் பெய்த பலத்த மழையில், விடுதியை ஒட்டியிருந்த ரோட்டில் பெருக்கெடுத்த வெள்ளத்தில், விடுதியின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது; விடுதிக்குள். மழைநீர் புகுந்தது.நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையில், விடுதிக்குள் மீண் டும் வெள்ளம் புகுந்தது.

இரவு 11:00 மணிக்கு, விடுதியில் தங்கியிருந்த, 7 மாணவியர், அருகேயுள்ள கோவில் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்; அதிகாலை, மழைநீர் வழிந்ததும், மீண்டும் மாணவியர், விடுதிக்குள் வந்தனர். விடுதிக்குள் உள்ள கிணற்றிலும் மழைநீர் புகுந்து, நிரம்பியது; பேரூராட்சி துாய்மை பணியாளர்கள். அவற்றை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். தடுப்புச்சுவர் கட்டுமானப்பணியை விரைவில் துவக்க நடவடிக்கை தேவை.மழைக்காலத்தில், மாணவியர் பாதுகாப்பு கருதி, அவிநாசி லிங்கேஸ் வேரர் கோவிலுக்கு சொந்தமான மண்டபத்தில் மாணவியரை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை, விடுதி நிர்வா கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X