பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 04, 2021
Share
Advertisement
அக்., 4, 1998நெல்லை மாவட்டம், களக்காட்டிற்கு அருகில் உள்ள சாலை நயினார் பள்ளிவாசல் எனும் சிற்றுாரில், 1930 செப்., 6ல் பிறந்தவர், சாலை இளந்திரையன். இயற்பெயர், வ.ரா.மகாலிங்கம்.சென்னை மாநில கல்லுாரியில் முதன் முறையாக துவக்கப்பட்ட இலக்கிய முதுவர் படிப்பில் சேர்ந்து, பட்டம் பெற்றார். கவிதை, கட்டுரை என ஏராளமான தமிழ் நுால்கள் எழுதியுள்ளார். மத்திய விளம்பர, தகவல் ஒலிபரப்பு துறையில்
 இதே நாளில் அன்று

அக்., 4, 1998

நெல்லை மாவட்டம், களக்காட்டிற்கு அருகில் உள்ள சாலை நயினார் பள்ளிவாசல் எனும் சிற்றுாரில், 1930 செப்., 6ல் பிறந்தவர், சாலை இளந்திரையன். இயற்பெயர், வ.ரா.மகாலிங்கம்.

சென்னை மாநில கல்லுாரியில் முதன் முறையாக துவக்கப்பட்ட இலக்கிய முதுவர் படிப்பில் சேர்ந்து, பட்டம் பெற்றார். கவிதை, கட்டுரை என ஏராளமான தமிழ் நுால்கள் எழுதியுள்ளார். மத்திய விளம்பர, தகவல் ஒலிபரப்பு துறையில் மொழிபெயர்ப்பாளராகவும், டில்லி பல்கலையில் தமிழ் துறை பேராசிரியராகவும் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்று, தமிழகம் திரும்பினார்.

சென்னையில், 'சாலை' அச்சகத்தை துவக்கினார்.டில்லி தமிழ் சங்கத்தின் சார்பில் வெளியிடப் பட்ட, 'சுடர்' இதழின் ஆசிரியராகவும், 'அறிவியக்கம்' இதழில் சிறப்பாசிரியராகவும் பணியாற்றினார்.தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களுடன் இணைந்து, உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தை நிறுவினர். இக்கழகமே, உலக தமிழ் மாநாடுகளை நடத்துகிறது. மேலும், 'அறிவியக்க மாநாடு, வளர்தமிழ் மாநாடு' உட்பட ஏராளமான மாநாடுகளை நடத்தினர்.

தஞ்சை தமிழ் பல்கலையை உருவாக்குவதில், முக்கிய பங்கு வகித்தார்.கடந்த 1998 அக்., 4ல், தன் 68வது வயதில் இயற்கை எய்தினார்.சாலை இளந்திரையன் காலமான தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X