சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

ஐந்து நிமிடத்தில் ஏறிவிடலாம்!

Updated : அக் 08, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தென்னை மரம் ஏறும் கருவி தொடர்பாக கூறும், சென்னையில் செயல்பட்டு வரும் தென்னை வளர்ச்சி வாரியத்தின் தமிழ்நாடு மண்டல இயக்குனர் - பொறுப்பு, டி.பால சுதாகரி:தென்னை சாகுபடி செய்வது மிக எளிது; ஆனால், அதில் காய்கள் பறிப்பது தான் கடினமான பணியாக விவசாயிகள் கூறுவர்; இது உண்மையே.தென்னை மரங்கள் உயரமாக வளர்ந்தால், தேங்காய் பறிக்க ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். சில விவசாயிகள் உயரமான
சொல்கிறார்கள்

தென்னை மரம் ஏறும் கருவி தொடர்பாக கூறும், சென்னையில் செயல்பட்டு வரும் தென்னை வளர்ச்சி வாரியத்தின் தமிழ்நாடு மண்டல இயக்குனர் - பொறுப்பு, டி.பால சுதாகரி:
தென்னை சாகுபடி செய்வது மிக எளிது; ஆனால், அதில் காய்கள் பறிப்பது தான் கடினமான பணியாக விவசாயிகள் கூறுவர்; இது உண்மையே.தென்னை மரங்கள் உயரமாக வளர்ந்தால், தேங்காய் பறிக்க ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். சில விவசாயிகள் உயரமான மரங்களை அழித்து விட்டு, குட்டை ரகக்கன்றுகளை நடுகின்றனர்.

ஆனால்,உயரமான மரங்களை வெட்ட தேவையில்லை. எளிய தீர்வு வாயிலாக சரி செய்யலாம். தென்னை மரத்துடன் இணைத்து, மரம் ஏறும் கருவியை நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ளோம். இதன் வாயிலாக, 60 அடி உயரம் கொண்ட மரத்தில் கூட, ஐந்து நிமிடத்தில் ஏறிவிடலாம். பெண்கள் கூட எளிதாக இந்தக் கருவியைப் பயன்படுத்தி மரம் ஏற முடியும்; மிகவும் பாதுகாப்பானது;

இதில் ஏறும்போது பயமும் ஏற்படாது. இதன் விலை 3,000 ரூபாய்.கேரளாவில் செயல்பட்டு வரும் மண்டல விவசாயத் தொழில் வளர்ச்சி கூட்டுறவு சங்கத்தில் இந்த, தென்னை மரம் ஏறும் கருவி விற்பனை செய்யப்படுகிறது.இதுதவிர, வேளாண்மை அறிவியல் நிலையத்துடன் இணைந்து, தென்னை மர நண்பர்கள் திட்டத்தின்படி, தென்னை மகசூல் பெருக்க, பல விதமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாக தென்னை மரம் ஏறும் கருவி குறித்த செயல் விளக்கம் கொடுத்து வருகிறோம்.தென்னை மர நண்பர்கள் குழுவில் 20 விவசாயிகள் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் பயிற்சி பெறும் விவசாயிகளுக்கு இலவசமாக தென்னை மரம் ஏறும் கருவியை வழங்குகிறோம். தென்னை மர நண்பர்கள் திட்டம் பற்றிக் கூடுதல் விபரங்களை www.coconutboard.in/foct/friends.aspx என்ற இணையதளத்தில் அறியலாம்.

சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள வீட்டுத்தோட்டங்களில் தென்னை மரங்கள் உள்ளன. தேங்காய் பறிக்க அதிக கூலி கேட்பதால், தேங்காய் பறிக்காமல் விட்டுவிடுகின்றனர். இந்தப் பிரச்னைக்கு தீர்வாக, தென்னை மரம் ஏறும் கருவியைப் பயன்படுத்தலாம்.

இது குறித்த கூடுதல் விபரங்களை, கேரள மண்டல விவசாயத் தொழில் வளர்ச்சி கூட்டுறவு சங்கம், எஸ்.பி.சி.ஏ., ரோடு, தாலப், கண்ணுார் - 670 002 என்ற முகவரி மற்றும் போன்: 0497 - 2700 663, மொபைல் எண்: 094460 05806ல் பெறலாம்.

தமிழ்நாடு மண்டல அலுவலகம், தென்னை வளர்ச்சி வாரியம், 47, டாக்டர் ராமசாமி ரோடு, கே.கே.நகர், சென்னை -- 600 078 என்ற முகவரி மற்றும் 044 - 2366 2684 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
04-அக்-202109:04:05 IST Report Abuse
RajanRajan பனைமர தொழில் ஒழிந்தது போல தென்னைமர தொழிலும் விரைவில் தமிழகத்திலே அழிந்து விடும். இதன் முக்கிய ஆதாயம் சேர்வதே அரசியல்வாதிகளின் சாராய பட்டறை நிறுவனங்களால் தான் என்பதில் ஐயமில்லை.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
04-அக்-202106:57:15 IST Report Abuse
NicoleThomson நீங்க மாத்திரம் ஐந்து நிமிடங்களில் இந்த கருவி கொண்டு ஏறி காட்டிடுங்க மேடம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X