பொது செய்தி

தமிழ்நாடு

வடமாநில தொழிலாளர் படையெடுப்பு!

Added : அக் 04, 2021
Share
Advertisement
தொற்று தணிந்ததால், வேலைவாய்ப்பு சரணாலயத்துக்கு...திருப்பூர், அக். 4-தொற்று தணிந்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு சரணாலயமான திருப்பூருக்கு வடமாநில தொழிலாளர்கள் படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.ரயில் நிலையத்தில் நேற்று 1,500க்கும் மேற்பட்ட வடமாநிலத்தினர் வந்ததால், அவர்களைப் பரிசோதிக்க நீண்ட நேரமானது.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்

தொற்று தணிந்ததால், வேலைவாய்ப்பு சரணாலயத்துக்கு...

திருப்பூர், அக். 4-

தொற்று தணிந்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு சரணாலயமான திருப்பூருக்கு வடமாநில தொழிலாளர்கள் படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.ரயில் நிலையத்தில் நேற்று 1,500க்கும் மேற்பட்ட வடமாநிலத்தினர் வந்ததால், அவர்களைப் பரிசோதிக்க நீண்ட நேரமானது.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் விட்டு இறங்குவோர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக, வடமாநில ரயில்களில் வருவோர் கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்; இதுவரை ஒரு 'டோஸ்' கூட செலுத்தவில்லையெனில், அங்கேயே தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.தற்போது நாடு முழுவதும் தொற்று பரவல் சற்று குறைந்துள்ளது. இதனால், பணி வாய்ப்பு தேடி திருப்பூருக்கு படையெடுப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.வடமாநில ரயில்களில், 400 முதல், 600 பேர் தினமும் வந்திறங்குகின்றனர். கோரக்பூர் - கொச்சுவேலி (ரப்திசாகர்), பாட்னா - எர்ணாகுளம் (பாட்னா எக்ஸ்பிரஸ்), தன்பாத் - ஆலப்புழா (டாடாநகர் எக்ஸ்பிரஸ்), சில்சார் - திருவனந்தபுரம் ஆகிய வாராந்திர ரயில்கள் நேற்று திருப்பூர் வந்தன; ரயில்களில் இருந்து 1,500க்கும் மேற்பட்டோர் இறங்கினர். இரண்டு டாக்டர், ஆறு செவிலியர், பத்து உதவியாளர் உள்ளிட்ட, 20 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் பணியில் இருந்தனர்.ரப்திசாகர் ரயிலில் வந்திறங்கியவர்களை பரிசோதித்து முடிப்பதற்குள், பாட்னா ரயிலில் பலர் வந்திறங்க நெரிசல் அதிகமானது. முதல் பிளாட்பார்மில் நீண்ட வரிசையில் மூன்று மணி நேரம் வடமாநிலத்தினர் காக்க வைக்கப்பட்டனர்.வடமாநிலத்தில் இருந்து கூடுதலாக பயணிகள் வர துவங்கியுள்ளதால், வாராந்திர ரயில் வரும் நாட்களில் கூடுதல் மருத்துவ குழு மூலம் பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநகராட்சி துரிதப்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X