குழந்தைகள் சித்ரவதை; காப்பகத்திற்கு சீல்; இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்காங்., -- எம்.எல்.ஏ., கைதுகவுகாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமின் தர்ராங் மாவட்டத்தில், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றியபோது மோதல் உருவானது. இது குறித்து, வகுப்புவாதத்தை துாண்டும் வகையில் சில கருத்துகளை, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஷெர்மன் அலி அகமது கூறினார். இதற்கு விளக்கம் கோரி, காங்., தரப்பில் அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதற்கிடையே, இவரது
today, crime, இன்றைய, கிரைம், ரவுண்ட், அப்,


இந்திய நிகழ்வுகள்காங்., -- எம்.எல்.ஏ., கைது

கவுகாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமின் தர்ராங் மாவட்டத்தில், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றியபோது மோதல் உருவானது. இது குறித்து, வகுப்புவாதத்தை துாண்டும் வகையில் சில கருத்துகளை, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஷெர்மன் அலி அகமது கூறினார். இதற்கு விளக்கம் கோரி, காங்., தரப்பில் அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதற்கிடையே, இவரது கருத்துகள் தொடர்பான புகாரின் அடிப்படையில், தேச துரோக வழக்கு பதிவு செய்த போலீசார், எம்.எல்.ஏ., ஷெர்மன் அலியை கைது செய்தனர்.

பெண்ணை தாக்கிய போலீஸ்

ரூர்கேலா: கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி அனிதாராஜ் ஷிரஹட்டி, 30. இவர் நேற்று முன்தினம் ஒடிசாவின் ரூர்கேலாவில் ரயிலில் பழங்கள் விற்றுள்ளார். 'டிக்கெட்' இல்லாததால் அவரை, ஆர்.பி.எப்., எனப்படும் ரயில்வே பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் அஜித் நாயக் தாக்கியுள்ளார். இது குறித்து அஜித் நாயக் மீது, ரூர்கேலா ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மோசடி வழக்கில் காங்., தலைவர்?

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன் பெயரிலான அறக்கட்டளை சொத்துக்களை முறைகேடு செய்ததாக, கண்ணுார் எம்.பி.,யும், காங்., மாநில தலைவருமான சுதாகரன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இது குறித்து விசாரித்த உளவுத் துறை, புகார் தொடர்பாக, எம்.பி., மீதான மேல் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது குறித்து சுதாகரன் கூறும்போது, ''நான் கறைபடியாத அரசியல்வாதி. எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார்,'' என்றார்.

வெள்ளிக்கட்டிகளுடன் 3 பேர் கைது

கிரிடிஹ்: ஜார்க்கண்டின் கிரிடிஹ் மாவட்டம் முபாசில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, காரில் கடத்தி வந்த 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 73 வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மூவர் கைதானதுடன், தலைமறைவான முக்கிய குற்றவாளி ராஜேஷ் குப்தாவை, போலீசார் தேடுகின்றனர்.


தமிழக நிகழ்வுகள்

ஆற்றில் மூழ்கி மாணவர் பலி

திருப்பூர்:இடுவாய், வாசுகி நகரை சேர்ந்தவர் ஆதித்யராம், 16; பாலிடெக்னிக் மாணவர்; தனது நண்பர், கள்ளிமந்தயத்தை சேர்ந்த சூர்யாவின், 15, பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, நேற்று முன்தினம் மதியம் திருப்பூரில் இருந்து தாராபுரம் சென்றார்.

இவருடன் நண்பர்கள் செல்வக்குமார், 15, அகிஷ், 15 ஆகியோரும் சென்றனர். தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்த சூர்யா, மூவரையும் அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்; அப்போது, தாராபுரம் - ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள அமராவதி ஆற்றில் இறங்கி நால்வரும் குளித்தனர். எதிர்பாராத விதமாக ஆதித்யராம் சிக்கினார். மற்ற, மூவரும், மீட்க முயன்றும், முடியவில்லை.தாராபுரம் தீயணைப்பு நிலையத்தினர், இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின், ஆதித்யராமை சடலமாக மீட்டனர். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


latest tamil newsகுழந்தைகள் சித்ரவதை: காப்பகத்திற்கு சீல்

புதுக்கோட்டை-அரசு பள்ளி ஆசிரியை முறைகேடாக நடத்திய காப்பகத்தில், குழந்தைகள் சித்ரவதை செய்யப்பட்டதால், அதற்கு 'சீல்' வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில், 'டாக்டர் குழந்தைகள் பாதுகாப்பு காப்பகம்' என்ற பெயரில் கலைமகள், 47, என்பவர் காப்பகம் நடத்தி வருகிறார். இவரது கணவர் ராஜேந்திரன், 51; இதன் கண்காணிப்பாளராக உள்ளார்.திடீர் சோதனைகலைமகள், குடுமியான்மலையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார்.வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்று காப்பகத்தை நடத்தி வருகிறார்.

காப்பகத்தில் உள்ள சிறுவர்களை கொடுமைப்படுத்துவதாகவும், அரசு ஊழியர் எவ்வாறு காப்பகம் நடத்த முடியும் எனவும், புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.இதையடுத்து, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் குணசீலி தலைமையில், அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று காப்பகத்திற்கு சென்று சோதனை செய்தனர்.இதில், அரசு அனுமதி பெற்று இருந்தும், அரசு ஊழியராக பணியாற்றும் ஒருவர் எவ்வாறு காப்பகம் நடத்தி வருகிறார் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தலைமறைவு

அங்குள்ள சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களை கொடுமைப்படுத்தியதும் தெரிந்தது. அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்த கலைமகள் மற்றும் ராஜேந்திரன் தலைமறைவாகி விட்டனர்.சோதனைக்கு பின், காப்பகத்தில் இருந்து ஏழு சிறுவர்கள் மீட்கப்பட்டு, புதுக்கோட்டையில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.காப்பகத்திற்கும் 'சீல்' வைத்தனர். அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து, கலைமகள் மற்றும் ராஜேந்திரனை தேடி வருகின்றனர்.


latest tamil newsநள்ளிரவில் சுவர் இடிந்து; தாய் பலி; மகன் படுகாயம்

ஈரோடு-ஈரோடில் நள்ளிரவில் சுவர் இடிந்து விழுந்ததில், தாய் பலியானார். மகன், பலத்த காயத்துடன் சிகிச்சை பெறுகிறார்.

ஈரோடு, மரப்பாலம், நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள், 70; தனியார் மருத்துவமனையில் தொழிலாளி. மண் சுவரால் கட்டப்பட்ட, ஓடு வேய்ந்த வீட்டில் தனியாக வசித்தார். இரவில் மட்டும் மகன் ராமசாமி, 45, துணைக்கு தாய் வீட்டில் படுத்து கொள்வார்.நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் துாங்கினர். இப்பகுதியில், சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், நேற்று அதிகாலை 2:20 மணியளவில் திடீரென வீடு இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி தாய், மகன் அலறினர்.ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தலை, கை, கால் மற்றும் உடம்பில் பலத்த காயமடைந்த ராஜம்மாளை சடலமாகவே மீட்க முடிந்தது. பலத்த காயமடைந்த ராமசாமியை, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


latest tamil news


நள்ளிரவில் குடோனில் தீ: மஞ்சள் மூட்டைகள் சேதம்

கோபி-கவுந்தப்பாடி அருகே குடோன்களில் ஏற்பட்ட தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் எரிந்து நாசமாகின.

ஈரோடு, சத்தி ரோட்டைச் சேர்ந்த சகோதரர்கள் ராஜேந்திரகுமார் அகர்வால், 55; சஞ்சய்குமார் அகர்வால், 53. இருவரும், கவுந்தப்பாடி, பெரியபுலியூர் அருகே தயிர்பாளையம் பிரிவு செல்லும் வழியில், சொந்தமாக நான்கு கிடங்குகளில் மஞ்சள் இருப்பு வைத்து, 'பாலீஷ்' செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில், அப்பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்நிலையில், அதிகாலை 1:00 மணிக்கு, ஒரு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைக் கண்ட இரவு காவலர், நிறுவன உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

பவானி தீயணைப்பு துறையினர், அதிகாலை 2:00 மணிக்கு விரைந்து வந்தனர். அதற்குள் இரண்டாவது குடோனுக்கும் தீ பரவி இருந்தது.தீ பரவலை கட்டுப்படுத்த முடியாததால், கோபி, பெருந்துறை, ஈரோடு தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் வாகனங்கள்வரவழைக்கப்பட்டன.அதிகமாக புகை வெளியேறியதால், தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது.பொக்லைன் இயந்திரம் மூலம், குடோன் சுவரை இடித்து, 10 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்தனர்.

இதனால், மற்ற இரு குடோன்களுக்கும் தீ பரவுவது தடுக்கப்பட்டது. தீயில், ஆயிரக்கணக்கான மூட்டை மஞ்சள் எரிந்து நாசமாகி இருக்கலாம். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம் என தெரிகிறது.மின்னல் தாக்கி தீப்பிடித்ததா அல்லது மின் கசிவால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


உலக நிகழ்வுகள்

ஏமனில் மோதல்: 10 பேர் பலி

சனா: மேற்காசிய நாடான ஏமனில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், இங்குள்ள சனா பகுதியில் சவுதி அரேபியா தலைமையிலான படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நேற்று பயங்கர மோதல் ஏற்பட்டது. அதிபர் மாளிகைக்கு அருகில் நடந்த இந்த கலவரத்தில், பொதுமக்கள் நான்கு பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்

சீன விமானங்களால் பதற்றம்

தைபே: நம் அண்டை நாடான சீனா, தைவானை தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. சீன விமானப் படைக்கு சொந்தமான 38 போர் விமானங்கள், கடந்த 2ம் தேதி தைவான் வான்வழிப் பகுதிக்குள் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக, நேற்று முன்தினமும் தைவான் எல்லைப் பகுதிக்குள் 39 சீன போர் விமானங்கள் வட்டமிட்டு சென்றன. இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அதிபருக்கு எதிராக போராட்டம்

ரியோ டி ஜெனிரோ: தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா வைரசால் இதுவரை 5.97 லட்சம் பேர் உயிரிழந்துஉள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் நெருக்கடியை முறையாக கையாள தவறியதாக கூறி, அதிபர் ஜெயர் போல்சோனாரோவை பதவி விலக வலியுறுத்தி ரியோ டி ஜெனிரோவில், நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
04-அக்-202113:10:29 IST Report Abuse
raja இன்ஜினியரிங் பட்டதாரி..... ரூர்கேலாவில் ரயிலில் பழங்கள் விற்கிறார்...போலீஸ் தாக்குகிறது டிக்கெட் இல்லை என்று ..... தமிழகத்தில் செயின் பறிப்பு செய்கிறார்கள்...போலீஸ் அவர்களை மரியாதையுடன் நடத்துகிறார்கள்... என்ன கொடுமை சரவணா ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X