ஆக்சிஜன் பற்றாக்குறை: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி-கொரோனா இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்ட பலருக்கும் ஆக்சிஜன் கிடைக்காதது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது.கடந்த மார்ச் முதல், மே மாதம் வரை கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாடு முழுதும் கடுமையாக இருந்தது. அப்போது ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான விசாரணைக்கு

புதுடில்லி-கொரோனா இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்ட பலருக்கும் ஆக்சிஜன் கிடைக்காதது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது.latest tamil news


கடந்த மார்ச் முதல், மே மாதம் வரை கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாடு முழுதும் கடுமையாக இருந்தது. அப்போது ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கலாகி உள்ளது.அதில் மத்திய அரசு, பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாநில அரசுகள் எதிர்தரப்பாக சேர்க்கப்பட்டு உள்ளன.


latest tamil news


மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா இரண்டாம் அலையின்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பலருக்கும் முறையாக ஆக்சிஜன் வழங்கப்படவில்லை. மிக அத்தியாவசியமான ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல உயிர்களை இழக்கும் நிலை ஏற்பட்டது.இதற்கான காரணம் அறிய, நீதிமன்ற கண்காணிப்புடன் சி.பி.ஐ., அல்லது சிறப்பு அமைப்பினர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.பொதுமக்கள் நலன் காப்பது மாநில அரசுகளின் அடிப்படை கடமை என்ற நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கான காரணம் அறியப்பட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.இந்த மனு, நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
04-அக்-202110:40:10 IST Report Abuse
R. Vidya Sagar உச்ச நீதிமன்றத்துக்கு இந்த விஷயத்தில் ஒரு Task Force ஐ நியமித்ததே மறந்து போயிருக்கும். இப்பொழுது போய் ஞாபகப்படுத்துகிறார்.
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
04-அக்-202110:17:32 IST Report Abuse
Arul Narayanan இந்த போஸ்ட் மார்ட்டம் எல்லாம் இப்போது தேவையா? லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான வழக்குகள் சிபிஐயிடம் காத்திருக்கின்றன. இரண்டாம் அலை போய் மூன்றாம் அலை வரப் போகிறது.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
04-அக்-202109:53:40 IST Report Abuse
M S RAGHUNATHAN எந்த மாநிலமும் அது பிஜேபியோ அல்லது மற்ற எதிரி கட்சிகளோ ஒரு மரணம் கூட ஆக்சிசன் பற்றாக்குறையால் நிகழவில்லை என்று மத்திய அரசிற்கு தகவல் கொடுத்துள்ளன. பின் என்ன விசாரணை வேண்டி இருக்கிறது. SC நேரம் வீணாவது தான் மிச்சம். அதை கடந்து வந்து விட்டோம் Your Honour My Lord.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X