தமிழ்நாடு

அணை நிறைய அவா! சிறுவாணியில் முழுமையாக நீர் தேக்க கேரளாவுடன் பேச்சு நடத்த வேண்டும்

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021
Share
Advertisement
கோவை:சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 52 மி.மீ., மழை பதிவாகியிருப்பதால், 43.39 அடியாக நீர் மட்டம் அதிகரித்திருக்கிறது. இந்தாண்டாவது அணையின் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க, கேரளாவுடன் தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும்.மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள வனப்பகுதிக்குள் சிறுவாணி அணை அமைந்திருக்கிறது. இதன் உயரம், 50 அடி. பாதுகாப்பு காரணங்களை கூறி, கடந்த சில ஆண்டுகளாக, 45
 அணை நிறைய அவா! சிறுவாணியில் முழுமையாக நீர் தேக்க கேரளாவுடன் பேச்சு நடத்த வேண்டும்

கோவை:சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 52 மி.மீ., மழை பதிவாகியிருப்பதால், 43.39 அடியாக நீர் மட்டம் அதிகரித்திருக்கிறது. இந்தாண்டாவது அணையின் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க, கேரளாவுடன் தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும்.மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள வனப்பகுதிக்குள் சிறுவாணி அணை அமைந்திருக்கிறது.

இதன் உயரம், 50 அடி. பாதுகாப்பு காரணங்களை கூறி, கடந்த சில ஆண்டுகளாக, 45 அடிக்கே தண்ணீர் இருப்பு வைக்கிறது, அம்மாநில நீர்ப்பாசனத்துறை.சில நாட்களுக்கு முன் நீர் மட்டம், 43 அடியாக இருந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, அணைக்கு நீர் வரத்து காணப்படுகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்பு பகுதியில், 52 மி.மீ., அடிவாரத்தில் 57 மி.மீ., மழை பதிவானது. இதனால், 43.39 அடியாக நீர் மட்டம் அதிகரித்திருக்கிறது. நொய்யல் ஆற்றிலும் நீர் வரத்து காணப்படுகிறது.

கடந்தாண்டு இதே நாளில், சிறுவாணியின் நீர் மட்டம், 45 அடியாக இருந்தது. கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நீர் இருப்பு குறைவு என்றாலும், வரும், 6ம் தேதி வரை கன மழை பொழிய வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.அணைக்கு மிக முக்கிய நீராதாரமான முத்திக்குளம், பட்டியாறு, பாம்பாறு உள்ளிட்ட ஆறுகளிலும் நீர் வரத்து காணப்படுவதால், நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பிருப்பதாக, குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவிக்கின்றனர்.

கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க, அணையில் இந்தாண்டு முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க, கேரளாவுடன் பேச்சு நடத்த வேண்டுமென, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு குடிநீர் வடிகால் வாரியம், மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து தமிழக அரசுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.இச்சூழலில், கடந்த இரு நாட்களாக பெய்து வரும் மழையால், நொய்யல் ஆற்றில் நீர் வரத்து காணப்படுகிறது.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி சித்திரைச்சாவடி அணைக்கட்டில் வினாடிக்கு, 400 கனஅடி தண்ணீர் வெளியேறியது.குனியமுத்துார் நீர் வழங்கு வாய்க்காலில், வினாடிக்கு 150 கனஅடி, உக்கடம் குளத்துக்கான வாய்க்காலில், 100 கனஅடி, குறிச்சி குளத்துக்கான வாய்க்காலில், 120 கனஅடி, வெள்ளலுார் குளத்துக்கான வாய்க்காலில், 30 கனஅடி தண்ணீர் திருப்பி விடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X