பொது செய்தி

தமிழ்நாடு

புளூ டைகரும், காமன் டைகரும் வெள்ளலுார் குளத்துக்கு 'விசிட்'

Added : அக் 04, 2021
Share
Advertisement
கோவை:குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நடவடிக்கையால், வெள்ளலுார் குளத்தில் ஏராளமான பட்டாம்பூச்சிகள் வரத்துவங்கியுள்ளன. கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், குளங்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வெள்ளலுார் குளத்தில், 800 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இதுதவிர பட்டாம்பூச்சிகளின் இனப்பெருக்கத்துக்காக நரிகிலுகிலுப்பை,
 புளூ டைகரும், காமன் டைகரும் வெள்ளலுார் குளத்துக்கு 'விசிட்'

கோவை:குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நடவடிக்கையால், வெள்ளலுார் குளத்தில் ஏராளமான பட்டாம்பூச்சிகள் வரத்துவங்கியுள்ளன. கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், குளங்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வெள்ளலுார் குளத்தில், 800 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இதுதவிர பட்டாம்பூச்சிகளின் இனப்பெருக்கத்துக்காக நரிகிலுகிலுப்பை, தேள்கொடுக்கு உள்ளிட்ட செடிகள் நடப்பட்டன.தற்போது பருவமழை காலம் என்பதால், ஏராளமான பட்டாம்பூச்சிகள் வெள்ளலுார் குளத்துக்கு வரத்துவங்கியுள்ளன. கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறியதாவது: வெள்ளலூர் குளக்கரையில், 2018 முதல் மியாவாக்கி முறையில் அடர்வனம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பட்டாம்பூச்சிகளின் வருகை அதிகரித்து வருகிறது. அதற்கான சூழலை மேம்படுத்த, 2020ம் ஆண்டு துவக்கத்தில் பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் மலர் செடிகளை தேர்ந்தெடுத்து பூங்காவனம் அமைக்கப்பட்டது.30க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. தற்போது பட்டாம்பூச்சிகள் இடப்பெயர்வு செய்யக்கூடிய காலம்.கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து பயணித்து, கோவையை அடைந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் தங்குகின்றன. இனப்பெருக்கம் செய்ய நீல்பொறி கருஞ்சி (blue tiger) மற்றும் சாதாரண பட்டாம்பூச்சி இனங்கள், தற்பொழுது வெள்ளலூர் குளக்கரையில் ஆயிரக்கணக்கில் தங்கியுள்ளன. அதற்கு தேவையான தாது உப்புக்களை கிலுகிலுப்பை, தேள் கொடுக்கி போன்ற செடிகளில் இருந்து சேகரித்து வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X