கொங்கு நாடு கல்லுாரியில் திறன் கண்டறியும் நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொங்கு நாடு கல்லுாரியில் திறன் கண்டறியும் நிகழ்ச்சி

Added : அக் 04, 2021
Share
கோவை:கவுண்டர்மில்ஸ், கொங்கு நாடு கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வி துறை சார்பில், இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான உடற்தகுதி திறன் கண்டறியும் நிகழ்ச்சி, கல்லுாரி மைதானத்தில் நடந்தது.நான்கு நாட்கள் நடந்த தேர்வில், மாணவ- மாணவிகளின் உயரம், எடை, வேகம், உடல் வலு, நெகிழ்வு தன்மை என, ஐந்து வகையான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் மாணவர்களின் விளையாட்டு திறன்கள்

கோவை:கவுண்டர்மில்ஸ், கொங்கு நாடு கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வி துறை சார்பில், இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான உடற்தகுதி திறன் கண்டறியும் நிகழ்ச்சி, கல்லுாரி மைதானத்தில் நடந்தது.நான்கு நாட்கள் நடந்த தேர்வில், மாணவ- மாணவிகளின் உயரம், எடை, வேகம், உடல் வலு, நெகிழ்வு தன்மை என, ஐந்து வகையான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் மாணவர்களின் விளையாட்டு திறன்கள் கண்டறியப்பட்டன. விளையாட்டு திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கு, கூடுதல் பயிற்சி மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் பற்றிய தகவல்கள் கற்றுத்தரப்படும்.முன்னதாக, கல்லுாரி முதல்வர் லட்சுமணசாமி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளராக, கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் கவிதாஸ்ரீ, சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X