பொது செய்தி

இந்தியா

சைவ உணவே சாப்பிடுகிறேன்: இந்திரா நூயி

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி-'சைவ உணவு பழக்கத்தையே கடைப்பிடிக்கிறேன். வீட்டின் பூஜையறை யில் விளக்கேற்றாமல் வெளியே செல்ல மாட்டேன்' என, 'பெப்சிகோ' நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான இந்திரா நுாயி, 65, தான் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.அதிகாரமிக்க பெண்சென்னையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து, பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நீண்டகாலம்

புதுடில்லி-'சைவ உணவு பழக்கத்தையே கடைப்பிடிக்கிறேன். வீட்டின் பூஜையறை யில் விளக்கேற்றாமல் வெளியே செல்ல மாட்டேன்' என, 'பெப்சிகோ' நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான இந்திரா நுாயி, 65, தான் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.



latest tamil news


அதிகாரமிக்க பெண்சென்னையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து, பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நீண்டகாலம் பணியாற்றியவர் இந்திரா நுாயி.'போர்ப்ஸ்' பத்திரிகையின் உலகின் 100 அதிகாரமிக்க பெண்கள், 'பார்ச்சூன்' நிறுவனத்தின் உலகின் அதிக அதிகாரமிக்க பெண், 'டைம்ஸ்' இதழின் உலகின் 100 சிறந்த தலைவர்கள் என, சர்வதேச அளவிலான பெரும்பாலான பட்டியலில் இந்திரா நுாயி இடம் பெற்றுள்ளார்.தன் வாழ்க்கை வரலாறு தொடர்பாக, ஒரு புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். அதில் இந்தியாவுடனான தன் தொடர்புகள் குறித்து தனியாக ஒரு அத்தியாயத்தை இந்திய வாசகர்களுக்காக எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

நான் 43 ஆண்டுக்கு முன் இந்தியாவில் இருந்து சென்றேன். ஆனால் இந்தியா எப்போதும் என்னை விட்டு பிரிந்ததில்லை. நான் சைவ உணவு பழக்கத்தையே கடைப்பிடிக்கிறேன்.என் வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றாமல் வெளியே செல்ல மாட்டேன். 'டிவி'யில் அமெரிக்க தொடர்கள் பார்த்தாலும், இந்தியத் தொடர்களையும், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளையும் விரும்பி பார்ப்பேன்.இவற்றை பார்க்கும்போது, சென்னையில் பிறந்து வளர்ந்தது நினைவுக்கு வரும். இந்தியத் தொடர்களை பார்க்கும்போது, நம் இந்திய கலாசாரம் எந்த அளவுக்கு மாறியுள்ளது, பெண்களுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என்பது தெரியும்.சம்பாதிக்க அனுமதிஎன்னைப் பொறுத்தவரை, பெண்கள் விஷயத்தில், இந்தியா ஒரு காலை முந்தைய காலத்திலும், மற்றொரு காலை எதிர்காலத்திலும் வைத்துள்ளது.


latest tamil news


பெண்களுக்காக பல சட்டங்கள் இந்தியாவில் உள்ளன. மாணவரை விட மாணவியர் நன்கு படிக்கின்றனர். ஆனாலும் ஆண்களை சார்ந்தே, சம்பளம் இல்லாத தொழிலாளியாக பெண்கள் உள்ளனர்.பெண்களும் தொழில்கள், வேலைகளில் ஈடுபட வேண்டும். தனக்காகவும், குழந்தைகளுக்காகவும், இந்த சமூகத்துக்காகவும் அவர்கள் சுயமாக சம்பாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
04-அக்-202119:28:13 IST Report Abuse
m.viswanathan ஆக எங்க சுத்தினாலும் , பிராமணனை தொடாமல் உங்களால் பேச எழுத முடிய வில்லையே , இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழிந்து தமிழ்நாட்டில் , பார்ப்பான் இருக்க மாட்டான் , வன்னியர் , தேவர் , முதலியார் , கோனார் , செட்டியார் என நீங்களே உங்களுக்குள் அடித்து கொண்டு சாவுங்க
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
07-அக்-202103:37:19 IST Report Abuse
meenakshisundaramஇல்லே அவனுங்களும் பிராமணர்களை உதாரணமாக கொண்டு அமெரிக்காவுக்குள் நுழஞ்சிருக்காக....
Rate this:
Cancel
04-அக்-202115:43:23 IST Report Abuse
ராஜா அப்போ உங்களுக்கு சங்கி என்னும் பட்டம் இலவசமாக கிடைத்துவிடும்.
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
04-அக்-202113:15:04 IST Report Abuse
Paraman நம்ம ஊரு விருந்தாளிகளுக்கு பிறந்த டுமீளர் கூட்டம் பொறாமையில் இந்த பெண்மணியை பற்றி எப்பிடி எல்லாம் பொங்கி இருக்கிறது என்பது பார்த்தால் சிப்பு சிப்பாக வருகிறது சூரியனை பார்த்து....
Rate this:
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
04-அக்-202119:44:35 IST Report Abuse
தமிழன்ஒஹோ நீங்க சூரியனை பார்த்துதானா ? சரிதான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X