பொது செய்தி

தமிழ்நாடு

39,544 வீடுகள் கட்டும் பணி; விரைவில் துவக்குகிறது அரசு

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை--பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில், தமிழகத்தில் 39 ஆயிரத்து 544 வீடுகள் கட்டும் பணி விரைவில் துவக்கப்பட உள்ளதாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.நாடு முழுதும் ஏழை மக்களுக்காக, பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு

சென்னை--பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில், தமிழகத்தில் 39 ஆயிரத்து 544 வீடுகள் கட்டும் பணி விரைவில் துவக்கப்பட உள்ளதாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.



latest tamil news


நாடு முழுதும் ஏழை மக்களுக்காக, பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.இதில், பயனாளிகளின் பங்கேற்புடன் வீடு கட்டும் திட்டத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன்படி, நகர்ப்புற பகுதிகளில் 350 சதுர அடியில் வீடுகள் கட்டப்படுகின்றன.

இத்திட்டத்தில் ஒரு வீட்டுக்கான செலவில், 1.50 லட்சம் ரூபாயை மத்திய அரசும், 7 லட்சம் ரூபாயை மாநில அரசும் ஏற்கின்றன. மீதித் தொகையை பயனாளிகள் தர வேண்டும்.இதன்படி, தமிழகத்தின் 36 மாவட்டங்களில், 17 ஆயிரத்து 195 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.66 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதற்காக, தமிழக அரசு பரிந்துரைத்த 377 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் இதுவரை 27 ஆயிரத்து 496 வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன.இது குறித்து, வாரிய அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசு ஒப்புதல் அளித்த 1.66 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தில், 27 ஆயிரத்து 496 வீடுகள் கட்டும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியவற்றில் 99 ஆயிரத்து 250 வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.


latest tamil news


மேலும் 39 ஆயிரத்து 544 வீடுகள் கட்டும் பணிகள் விரைவில் துவக்கப்படும். கொரோனா மற்றும் ஊரடங்கால் கட்டுமான பொருட்கள் மட்டுமின்றி, பணியாளர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பணிகள் தாமதமாகி உள்ளன.குறிப்பாக, சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் போன்றவை அறிவிக்கப்பட்ட நிலையில், நடத்தை விதிகள் காரணமாகவும் சில பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இப்பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, கட்டுமான பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.இப்பணிகளின் நிலவரம் குறித்து, உயர் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-அக்-202114:51:45 IST Report Abuse
அப்புசாமி ரெண்டு கோடி வேல்சி, பாஞ்சு லக்ஷமெல்லாம் போட்டு முடிச்சுட்டா பெரியவா... இப்பொ 2022 பொ றக்கறதுக்குள்ளே எல்லாருக்கும் வீடு தர்ப்போறா ஓய்...
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
04-அக்-202112:21:07 IST Report Abuse
J.Isaac //1.5 லட்சம் மத்திய அரசு, 7 லட்சம் மாநில அரசு அளிக்கும்// எப்படி மத்திய அரசு திட்டமாகும்?
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
04-அக்-202112:20:26 IST Report Abuse
தத்வமசி எந்த அரசு என்பதை உரக்க சொல்லுங்கள். எல்லாவற்றுக்கும் மாநில ஊராட்சி அரசு லேபில் ஒட்டி விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X