லஞ்ச அதிகாரிகள் குறித்து தகவல் தருவோருக்கு பரிசு

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (57) | |
Advertisement
சென்னை-'லஞ்ச வேட்டையில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு பரிசு வழங்கப்படும்; அவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படும்' என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.சமீபத்தில், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடு, அலுவலகம், நட்சத்திர ஓட்டல்கள் என, பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை-'லஞ்ச வேட்டையில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு பரிசு வழங்கப்படும்; அவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படும்' என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.latest tamil news


சமீபத்தில், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடு, அலுவலகம், நட்சத்திர ஓட்டல்கள் என, பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல, முன்னாள் அமைச்சர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கைத்தடிகளின் வீடுகள் மற்றும் நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் கட்டு கட்டாக பணம், கிலோ கணக்கில் தங்கம், வைரம், வெள்ளி பொருட்கள் சிக்கின. வீரமணி வீட்டில் குவித்து வைக்கப்பட்டு இருந்த, 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆற்று மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல, மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த, ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரி வெங்கடாசலத்தின் சொகுசு பங்களா, அலுவலகம் மற்றும் வீடு என, பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். அதில், அவரது வீட்டிலிருந்து 13 லட்சம் ரூபாய், 11 கிலோ தங்கம், 15 கிலோ சந்தன மரக்கட்டைகள், 6 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. விரைவில், ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், அரசு அதிகாரிகள் லஞ்ச வேட்டையில் ஈடுபடுவது பற்றி போலீசாருக்கு புகார்கள் வந்தன.


latest tamil news


இதையடுத்து, 38 மாவட்டங்களிலும் ஓரிரு நாட்களுக்கு முன் ஒரே நேரத்தில், சார் - பதிவாளர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் அலுவலகம் என, பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், அதிகாரிகளின் மேஜை, பீரோ உள்ளிட்ட இடங்களில் பதுக்கி இருந்த லஞ்சப் பணம், 31 லட்சம் ரூபாய் சிக்கியது.அதனால், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்து, 044 - 2231 0989 என்ற எண்ணில் பொது மக்கள் தகவல் தரலாம்; அவர்கள் பற்றிய ரகசியம் காக்கப்படும். தகவல் தருவோருக்கு பரிசும் வழங்கப்படும் என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Aruna - Trichy,இந்தியா
05-அக்-202108:48:16 IST Report Abuse
S.Aruna முதலில் அதிகாரிகளாக இருப்போர் தான் ஆய்வுக்கு செல்லுமிடங்களில் உண்ணும் உணவுக்கு உரிய பணத்தை செலுத்த முன்வரவேண்டும். ஆய்வுக்கூடங்களின் போது கறி விருந்துகள் தவிர்க்கப்பட வேண்டும். இவை நடந்தால் கீழ் நிலையில் உள்ள அலுவலர்கள் லஞ்சம் வாங்கவேண்டிய தேவை இருக்காது. கணக்கு ஆய்வு செய்யச்செல்லும் ஆடிட்டர்கள் தகுதிக்கு மீறிய வாகன மற்றும் தங்குமிட வசதிகளை கேட்பது ஏன்? வருவாய் துறையில் ஆண்டுதோறும் நடக்கும் சமாபந்தி உணவு செலவுகள் யார் தலையில் காட்டப்படுகிறது? மாதம் தோறும் மாமூல்மலை பொழிந்ததா என போலீஸ், பதிவுத்துறை, ஆர்டீஓ மனம் மகிழ்வது ஏன்? பிரச்சினை உணவளிப்பதில் துவங்கி சட்டத்துக்குட்பட்டு விரைவாக பணிசெய்வது வழியாக சட்டத்துக்கு புறம்பாக பணிசெய்வதில் முடிகிறது. எந்த ஒரு மந்திரியும் அரசு அலுவலரின் கையொப்பமின்றி ஒரு ரூபாய்கூட திருட முடியாது. புறங்கை நக்கி பெருமிதமடையும் அரசு ஊழியர்கள் மனம் மாறவேண்டும்.
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
04-அக்-202119:36:11 IST Report Abuse
m.viswanathan லஞ்சம் வாங்கும் அதிகாரியை தேநீர் அருந்த வெளியே அழைத்து , ஒரு பத்து பேர் , ஏதேனும் சந்துல வைத்து , கை, காலி முறியுங்க , லஞ்சம் தானா ஒழியம்
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
04-அக்-202114:38:34 IST Report Abuse
jayvee அணைத்து சார்பதிவாளர் மற்றும் இதர அரசு அலுவகத்தில் வேலை செய்யும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் பெரும்பாலோர் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்துவந்தால் கூட, இவர்கள் லஞ்சம் வாங்குவது மட்டுமல்லாமல் அங்கு பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கும் பினாமியாக செயல்படுகிறார்கள் .. இது அரசுக்கு தெரியுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X