பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2.20 கோடியில் மாற்று பாதையில் கழிவுநீர் குழாய்

Added : அக் 04, 2021
Share
Advertisement
எம்.ஜி.ஆர்., நகர் : அண்ணா பிரதான சாலையில் அடிக்கடி ஏற்படும் 'மெகா' பள்ளங்களுக்கு தீர்வு காணும் வகையில், 2.20 கோடி ரூபாய் செலவில், மாற்றுப்பாதையில் கழிவு நீர் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் பல ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.கோடம்பாக்கம் மண்டலம், எம்.ஜி.ஆர்.நகரில் அண்ணா பிரதான சாலை உள்ளது. இது, கே.கே.நகர்
 ரூ.2.20 கோடியில் மாற்று பாதையில் கழிவுநீர் குழாய்

எம்.ஜி.ஆர்., நகர் : அண்ணா பிரதான சாலையில் அடிக்கடி ஏற்படும் 'மெகா' பள்ளங்களுக்கு தீர்வு காணும் வகையில், 2.20 கோடி ரூபாய் செலவில், மாற்றுப்பாதையில் கழிவு நீர் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதனால் பல ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.கோடம்பாக்கம் மண்டலம், எம்.ஜி.ஆர்.நகரில் அண்ணா பிரதான சாலை உள்ளது. இது, கே.கே.நகர் மற்றும் அசோக் நகரை இணைக்கும் பிரதான சாலையாகும்.இச்சாலையின் மட்டத்தில் இருந்து, 20 அடி ஆழத்தில் செல்லும், 750 மி.மீ., விட்டம் உடைய கழிவு நீர் குழாய் வாயிலாக, மாம்பலம், சைதாப்பேட்டை, அசோக் நகர், கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர் ஆகிய பகுதிகளில் சேகரமாகும் கழிவு நீர், நெசப்பாக்கத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது.குழாய் சேதம்இந்த கழிவுநீர் குழாய், 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது குடியிருப்புகள் அதிகரித்துள்ளதால், இந்த குழாயின் கொள்ளளவு போதுமானதாக இல்லை.இக்கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, மண் சரிந்து, அண்ணா பிரதான சாலையில், எம்.ஜி.ஆர்.நகர் மார்க்கெட் சந்திப்பு, அஜந்தா பஸ் நிறுத்தம், அழகிரி சாலை சந்திப்பு, அம்மா உணவகம் என, பல்வேறு இடங்களில் சாலை உள்வாங்கி அடிக்கடி 'மெகா' பள்ளங்கள் ஏற்பட்டன.இச்சாலையில், தனியார் நிறுவனங்களால் அடிக்கடி கேபிள் பதிக்கும் பணிகள் நடந்ததால், குழாய் மிகவும் சேதமடைந்து

பல இடங்களில் கழிவுநீர் கசிவு ஏற்பட்டதாக, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காகவும், குழாயின் அழுத்தத்தை குறைக்கவும், மாற்றுப் பாதையில் இன்னொரு குழாய் அமைக்க குடிநீர் வாரியம் முடிவு செய்தது.மாற்று பாதைஇதையடுத்து, 2.20 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பாதையில் கழிவு நீர் குழாய் அமைக்கும் பணிகள் சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டன.தொடர் நடவடிக்கையாக, 27 அடி ஆழத்தில் எம்.ஜி.ஆர்., நகர் பஸ் நிறுத்தம் அருகே ஒரு மேன்ஹோல் மற்றும் எம்.ஜி.ஆர்., நகர் மார்க்கெட் சந்திப்பு அருகே இரண்டு மேன்ஹோல்களும் அமைக்கப்பட்டுள்ளன.இந்த மூன்று மேன்ஹோல் இடையே உள்ள, 400 அடி துாரத்திற்கு, நெசப்பாக்கம் -- அசோக் நகர் இடையிலான அண்ணா பிரதான சாலையில், 1,000 மி.மீ., விட்டம் உடைய குழாய் அமைத்து, கழிவுநீர் பாதையை மாற்றி அமைக்கும் பணிகள் நடக்கின்றன.இப்பணிகள் நிறைவு பெறும் போது, கழிவுநீர் பாதையின் அழுத்தம் குறைந்து பள்ளங்கள் ஏற்படும் நிலை தடுக்கப்படும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.மக்கள் தவிப்புஅண்ணா பிரதான சாலையில் உள்ள கழிவு நீர் பாதையில் பள்ளங்கள் ஏற்பட்டதால், கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர், வன்னியர் தெரு உள்ளிட்ட பகுதிகளில், அடிக்கடி கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது.மேலும், சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டதாலும், குடிநீர் வாரிய பணிகளாலும் சாலையும் குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.இச்சாலையின் ஒரு பகுதியில், மாநகராட்சியில் குப்பை அகற்றும் 'பேட்டரி' ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்காக 'ஷெட்' அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சாலையின் பெரும் பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சில மாதங்களாக மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X