தமிழ்நாடு

15ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு சலுகை

Added : அக் 04, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை மாநகராட்சியின் இரண்டாம் அரையாண்டு சொத்துவரியை, 15ம் தேதிக்குள் செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சி வருவாய் துறையினர், முதல் அரையாண்டில், சொத்து வரி, 375.59 கோடி ரூபாய் மற்றும் தொழில் வரி, 225.13 கோடி ரூபாய் என, மொத்தம், 600.72 கோடி ரூபாய்

சென்னை : சென்னை மாநகராட்சியின் இரண்டாம் அரையாண்டு சொத்துவரியை, 15ம் தேதிக்குள் செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சி வருவாய் துறையினர், முதல் அரையாண்டில், சொத்து வரி, 375.59 கோடி ரூபாய் மற்றும் தொழில் வரி, 225.13 கோடி ரூபாய் என, மொத்தம், 600.72 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. முந்தைய நிதியாண்டில், முதல் அரை ஆண்டில் சொத்து வரி,- தொழில் வரி மொத்தம், 382.30 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது. கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில், முதல் அரையாண்டு சொந்துவரி வசூலை ஒப்பிடும் போது சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிதி ஆண்டை தவிர்த்து, இந்த நிதி ஆண்டில் அதிகபட்சமாக வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சொத்து உரிமையாளர்கள், இரண்டாம் அரையாண்டு வரியை இம்மாதம், 15ம் தேதிக்குள் செலுத்தி, ஊக்கத் தொகையாக, ஐந்து சதவீதம், அதிகபட்சமாக, 5,000 ரூபாய் வரை பெற்று பயன் அடையளாம்.அக்., 15ம் தேதிக்கு பின் செலுத்தும் பட்சத்தில், செலுத்த வேண்டிய தொகையுடன் ஆண்டுக்கு 2 சதவீதம் தனிவட்டி சேர்த்து செலுத்தப்பட வேண்டும்.கடந்த காலங்களில், ஏப்ரம், 2021ல், ஒரு லட்சத்து, 16 ஆயிரத்து, 294 சொத்து உரிமையாளர்களும், அக்டோபர், 2020ல், 94 ஆயிரத்து 900 சொத்து உரிமையாளர்களும், குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்துவரி செலுத்தி, ஊக்கத் தொகை பெற்று பயனடைந்தது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X