தமிழ்நாடு

விபத்தில் மகனை இழந்த தாய்க்கு ரூ.19 லட்சம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
சென்னை : விபத்தில் இறந்தவரின் தாய்க்கு, 18.84 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 18; கல்லுாரி மாணவர். 2015 டிசம்பரில், தண்டையார் பேட்டை வைத்தியநாதன் தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அதிவேகமாக வந்த லாரி, இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து,

சென்னை : விபத்தில் இறந்தவரின் தாய்க்கு, 18.84 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 18; கல்லுாரி மாணவர். 2015 டிசம்பரில், தண்டையார் பேட்டை வைத்தியநாதன் தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அதிவேகமாக வந்த லாரி, இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து, சிகிச்சை பலனின்றி இறந்தார். மகன் இறப்புக்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சந்தோஷ்குமாரின் தாய் நாகவள்ளி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை, நீதிபதி வேல்ராஜ் முன் நடந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு:விசாரணையில், மனுதாரர் மகன் இறப்புக்கு லாரியை அதிவேகமாகவும் ஆஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக, 18.84 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X