தமிழ்நாடு

மறையும் ஆவடியின் அடையாளங்கள் பாதுகாக்க பொதுமக்கள் வேண்டுகோள்

Added : அக் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆவடி : ஆவடியின் அடையாளங்களை பாதுகாக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஆங்கிலத்தில் 'ஆர்ம்டு வெகிக்கிள் அன்டு அம்யுனிசன் டிப்போ ஆப் இந்தியா' என்பதை சுருக்கி, ஆவடி என்று அழைக்கப்படுகிறது.பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், திண் ஊர்தி தொழிற்சாலை, விமானப் படைதளம், படைத்துறை உடை தொழிற்சாலை ஆகியவை

ஆவடி : ஆவடியின் அடையாளங்களை பாதுகாக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆங்கிலத்தில் 'ஆர்ம்டு வெகிக்கிள் அன்டு அம்யுனிசன் டிப்போ ஆப் இந்தியா' என்பதை சுருக்கி, ஆவடி என்று அழைக்கப்படுகிறது.பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், திண் ஊர்தி தொழிற்சாலை, விமானப் படைதளம், படைத்துறை உடை தொழிற்சாலை ஆகியவை ஆவடியில் உள்ளன. முக்கியத்துவம்மேலும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை உள்ளிட்ட மத்திய அரசின் பாதுகாப்புத் துறை நிறுவனங்களும் உள்ளதால், ஆவடி சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆவடியின் இன்னொரு அடையாளமாக இருந்தது கால்நடைகள். அந்தளவிற்கு பசுக்களும், எருமைகளும், அவற்றிற்கு தேவையான மேய்ச்சல் நிலங்களும், விளைநிலங்களும், ஆவடியில் ஒரு காலத்தில் நிறைந்து காணப்பட்டன.இதை உணர்த்தும் விதமாக ஆவடியை, ஆ+அடி என பிரித்து, 'ஆ' என்பதற்கு தமிழில் 'பசு' எனவும், அதனால் ஆவடி என அழைக்கப்படு வதாகவும், பகுதிமக்கள் கூறுகின்றனர்.ஆவடி சுற்று வட்டார பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் சிறிதும் பெரிதுமாக உள்ளன.இவை அனைத்தும், ஆவடியின் அடையாளங்களாக பார்க்கப்படுகிறது.ஆவடியில் மக்கள் பெருக்கம், 1960ம் ஆண்டிற்குப் பிறகு அதிகரிக்கத் துவங்கியது. 1993ம் ஆண்டில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அடுத்த, 15 ஆண்டுகளில் பெருநகராட்சியாக மாறியது. தற்போது மாநகராட்சியாக வளர்ச்சி அடைந்துள்ளது.ஆனால், நீர் நிலைகள் அதிகமாக இருக்கும் ஆவடி பகுதியில், போதிய பராமரிப்பில்லாத காரணத்தால், கோடைக்காலங்களில் குடிநீர் தட்டுப்பாடும், அதை வினியோகிப்பதில் பிரச்னைகளும் ஏற்படுவதும் வாடிக்கையாகி உள்ளது.அவலம்ஆவடி படைத்துறை உடைத் தொழிற்சாலையில், 800 பெண்கள் உட்பட 2,300 தொழிலாளர்கள், ராணுவ வீரர்களுக்கு தேவையான மிக உயர்ந்த தரமும், தொழில் நுட்பமும் கொண்ட 'ஆர்மி லோகோ காம்பக்ட்' என்ற சீருடையை தயாரிக்கின்றனர்.

தற்போது, அந்த நிறுவனத்தை தனியாருக்கு ஒப்படைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், ஆவடி படைத்துறை உடை தொழிற்சாலை மூடப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு, தொழிலாளர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆவடியின் அடையாளமான பசுக்களை, அதன் உரிமையாளர்கள் தெருவில் விடுவதால், அவை போதிய உணவு கிடைக்காமல் அவதியுறுகின்றன. எனவே, இதுபோன்ற ஆவடியின் அடையாளங்களை, அதிகாரிகள் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
05-அக்-202113:40:23 IST Report Abuse
JeevaKiran இங்கு குண்டு துளைக்காத ஆடையும் (BULLET PROOF) தயாரிக்கப்படுகிறது என்பது இன்னும் விசேஷம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X