பொது செய்தி

தமிழ்நாடு

தரைப்பாலம் கால்வாயில் படர்ந்துள்ள ஆகாய தாமரை அகற்றும் பணி ஜரூர்

Added : அக் 04, 2021
Share
Advertisement
கொடுங்கையூர் : கொடுங்கையூர் தரைப்பாலம் கால்வாயில் வளர்ந்துள்ள, ஆகாயத்தாமரையை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.சென்னை கொடுங்கையூர் - எழில்நகர் தரைப்பாலம் அருகே செல்லும் கால்வாய் அருகே, ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. கால்வாயின் பெரும் பகுதியில் ஆகாயத்தாமரை செடிகளும் கோரைப்புற்களும் ஆக்கிரமித்துள்ளன. மேலும், பொதுமக்களால் கொட்டப்படும் குப்பையும், ஆகாயத்தாமரை
 தரைப்பாலம் கால்வாயில் படர்ந்துள்ள ஆகாய தாமரை அகற்றும் பணி ஜரூர்

கொடுங்கையூர் : கொடுங்கையூர் தரைப்பாலம் கால்வாயில் வளர்ந்துள்ள, ஆகாயத்தாமரையை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.

சென்னை கொடுங்கையூர் - எழில்நகர் தரைப்பாலம் அருகே செல்லும் கால்வாய் அருகே, ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. கால்வாயின் பெரும் பகுதியில் ஆகாயத்தாமரை செடிகளும் கோரைப்புற்களும் ஆக்கிரமித்துள்ளன. மேலும், பொதுமக்களால் கொட்டப்படும் குப்பையும், ஆகாயத்தாமரை செடிகளுடன் சேர்த்து கால்வாயை நிரப்பி விடுகிறது.

தேக்கம்கால்வாயில் செல்லும் தண்ணீரை ஆகாய தாமரை முழுவதுமாக மூடியிருப்பதால், அக்கம்பக்கத்தில் இருந்து அடித்து வரப்படும் குப்பை மற்றும் கழிவுகள், ஒரே இடத்தில் தேங்கிவிடுகின்றன.இதனால், இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பூச்சிகளும், வண்டுகளும் இரவு நேரங்களில் படையெடுத்து, வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன.இதனால் இப்பகுதி மக்கள், பல்வேறு வகையான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.விரைவில் மழைக்காலம் துவங்க உள்ளதால், கால்வாயில் உள்ள ஆகாயத்தாமரை செடிகள், குப்பையை அகற்றி தண்ணீர் வழிந்தோட வகை செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து நம் நாளிதழில் கடந்த ஆக., 24ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.எதிர்பார்ப்புசமீபத்தில் இக்கால்வாயை, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதையடுத்து தண்டையார்பேட்டை மாநகராட்சியினர், ஜே.சி.பி., இயந்திரம் மூலம், ஆகாயத்தாமரையை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், கால்வாயில் உள்ள குப்பை மற்றும் ஆகாயத்தாமரையை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X