பொது செய்தி

தமிழ்நாடு

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் ஜல்லி, மணல் தயாரிப்பு விறுவிறு

Added : அக் 04, 2021
Share
Advertisement
கொடுங்கையூர் : கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில், கட்டட கழிவுகளிலிருந்து ஜல்லி, மணல் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு, 350 ஏக்கர் பரப்பு கொண்டது. 1986 முதல் இங்கு குப்பை கொட்டப்படுகிறது.தற்போது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட முதல் எட்டு மண்டலங்களில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் 2,500 டன் குப்பை, கொடுங்கையூர்

கொடுங்கையூர் : கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில், கட்டட கழிவுகளிலிருந்து ஜல்லி, மணல் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.

வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு, 350 ஏக்கர் பரப்பு கொண்டது. 1986 முதல் இங்கு குப்பை கொட்டப்படுகிறது.தற்போது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட முதல் எட்டு மண்டலங்களில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் 2,500 டன் குப்பை, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது. இதில் 300 டன் கட்டட கழிவுகள் கொட்டப்படுகின்றன.

மலை போல் குவிந்துள்ள குப்பை கழிவுகளால், அப்பகுதிகளில் காற்று மாசு மற்றும் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் வசிப்போருக்கு சுவாச பிரச்னையுடன், புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.இதைத் தவிர்க்க, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் பல்வேறு திட்டங்களை மாநகராட்சி அறிமுகப்படுத்தி வருகிறது.அந்த வகையில், கட்டடம் மற்றும் இடிபாடு கழிவுகளை மறு பயன்பாட்டிற்கு கொண்டு வர, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் 400 மெட்ரிக் டன் திறன் கொண்ட, மறு பயன்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு, தினமும் கொண்டுவரப்படும் 300 டன் கட்டட கழிவுகள், ராட்சத இயந்திரம் மூலம் அரைக்கப்படுகின்றன.அதிலிருந்து, மூன்று விதமான அளவுகளில் ஜல்லிகள் தயாரிக்கப்படுகின்றன.

இரண்டு விதமான மணலும், எம் சாண்ட் மணலும் தயாரிக்கப்படுகின்றன.இந்த தயாரிப்புகள் ஐ.ஐ.டி., நிறுவனத்தின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை கட்டட பயன்பட்டிற்கு உகந்ததா எனவும் ஆய்வும் செய்யப்படுகிறது. ஆய்வறிக்கையின் முடிவைப் பொறுத்து, அவை பயன்பாட்டிற்கும் விற்பனைக்கும் வரும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.கட்டுமானக் கழிவுகளை மறுசுழற்சி செய்து உபயோகிப்பதன் மூலம் நிச்சயம் சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X