தமிழ்நாடு

திருநங்கையரிடம் கண்ணியக்குறைவு கூடாது போலீசாருக்கு கூடுதல் கமிஷனர் உத்தரவு

Added : அக் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : 'திருநங்கையர் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை தவிர்த்து, சமூகத்தில் நல்ல முறையில் வாழ பழகிக்கொள்ள வேண்டும். அவர்களிடம் போலீசார் கண்ணியக்குறைவாக நடந்து கொள்ளக் கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னையில், இரு தினங்களுக்கு முன், இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் மீது தாக்குதல் நடத்திய திருநங்கையர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, போலீசார் மற்றும்
 திருநங்கையரிடம் கண்ணியக்குறைவு கூடாது போலீசாருக்கு கூடுதல் கமிஷனர் உத்தரவு

சென்னை : 'திருநங்கையர் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை தவிர்த்து, சமூகத்தில் நல்ல முறையில் வாழ பழகிக்கொள்ள வேண்டும். அவர்களிடம் போலீசார் கண்ணியக்குறைவாக நடந்து கொள்ளக் கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில், இரு தினங்களுக்கு முன், இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் மீது தாக்குதல் நடத்திய திருநங்கையர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, போலீசார் மற்றும் திருநங்கையருடன் நல்லுறவு ஏற்படுத்தும் வகையில், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.தலைமையிடத்து கூடுதல் கமிஷனர் லோகநாதன் தலைமையில் நடந்த கூட்டத்தில், புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி, திருநங்கையர், சக்திதேவி, சவிதா, சுதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

இவர்களுடன், சென்னையில் வசிக்கும், 60 திருநங்கையர் பங்கேற்றனர்.கூட்டத்தில், தற்போது காவல் துறையில், எஸ்.ஐ..யாக பணியாற்றி வரும் திருநங்கை பிரித்திகா யாஷினி, பல்வேறு இன்னல்களுக்கிடையே, கல்வி கற்று, போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசு அதிகாரியானது பற்றி எடுத்துஉரைத்தார்.'திருநங்கையர் பாலியல் தொழிலில் இருந்து விடுபட்டு, சுய தொழில் துவங்க வேண்டும். சமூகத்தில் நல்ல நிலையில் வாழ வேண்டும். அவர்களுக்கு காவல் துறையினர் உதவி செய்ய வேண்டும்.திருநங்கையரிடம் காவல் துறையினர் கண்ணிக்குறைவாக நடந்து கொள்ளக்கூடாது' என, கூடுதல் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
04-அக்-202109:45:08 IST Report Abuse
JeevaKiran அதேபோல் அவர்களும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள அறிவுறுத்துங்கள். பொது இடங்களில், ரயில்களில், காசு கேட்டு கொடுக்கவில்லையென்றால், எத்தனை கேவலமாக பேசுகிறார்கள். சில நேரங்களில், அருவருப்பாக நடந்துகொள்கிறார்கள். துணியை தூக்கி காட்டுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X