உலக தலைவர்கள் ஊழல் அம்பலம்; வெளியானது ரகசிய ஆவணங்கள்

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
பனாமா-உலக நாடுகளின் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் முறைகேடாக கோடிக்கணக்கான ரூபாயை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள், 'பண்டோரா பேப்பர்ஸ்' என்ற பெயரில் நேற்று வெளியானது.இது, உலகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், சொந்த நாட்டில் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்யும் தகவலின் ரகசிய

பனாமா-உலக நாடுகளின் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் முறைகேடாக கோடிக்கணக்கான ரூபாயை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள், 'பண்டோரா பேப்பர்ஸ்' என்ற பெயரில் நேற்று வெளியானது.latest tamil news


இது, உலகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், சொந்த நாட்டில் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்யும் தகவலின் ரகசிய ஆவணங்கள், 2016ல் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட ஆலோசனை நிறுவனமான மொசாக் போன்செகா, ஒரு கோடிக்கும் அதிகமான ரகசிய ஆவணங்களை, 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் 2016ல் வெளியிட்டது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும் இந்த முறைகேடு களை அம்பலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தனர். பல தனி நபர்கள், நிறுவனங்களின் முறைகேடுகள் இதில் வெளியாகின. பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் இதில் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் அதேபோல் நேற்று பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டன.

பாகிஸ்தான் அமைச்சர்கள் கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ளதாகவும், அறக்கட்டளை என்ற பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மற்றும் அவரது மனைவி ஷெரி பிளேர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரேஸ் பாபிஸ், கென்யா ஜனாதிபதி உஹுரு உள்ளிட்டோர் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக சொத்து குவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


மேலும், சைப்ரஸ் நாட்டு அதிபர் நிக்கோஸ் அனஸ்தேசியேட்ஸ், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஈக்வடார் ஜனாதிபதி கில்லர்மோ லாசோ உட்பட பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் செய்துள்ள முறைகேடுகள் குறித்த ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளன.இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள், விளையாட்டு பிரபலங்கள் உட்பட, 300க்கும் மேற்பட்டோரின் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mannaandhai -  ( Posted via: Dinamalar Android App )
05-அக்-202104:52:51 IST Report Abuse
Mannaandhai Through out the world, இந்திய நேரம் இரவு 8 மணியில் இருந்து முடங்கியது வாட்ஸஅப். அதன் காரணம் இதுவாக இருக்கலாம் . தகவல்கள் பரவி சங்கடத்தை ஏற்படுத்தக்கூடாது அல்லவா ?
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
04-அக்-202116:15:04 IST Report Abuse
Aarkay முதலில் எங்கள் RGF-ற்கு வந்த நிதியைப்பற்றி சொல்லுங்கள். எங்கள் ஊரிலும் ஒருவர் இருக்கிறார். அவர் தூய்மையானவர். காய் நீட்டி எதுவும் வாங்காதவர். தனக்கு தரப்பட்டுள்ள பணியை செய்ய அவர் கேட்பதெல்லாம் இதுதான். "தேவாலயத்திற்கு ஏதாவது செய்துவிட்டு செல்லுங்கள் என வருவோரிடம் பணிப்பார். உண்டியலில் செலுத்தினால் மட்டுமே, வேலை நடக்கும். மாலையில் உண்டியல் எங்கு சென்று அன்றைய கலெக்ஷன் கணக்கிடப்படும் என்று நான் சொல்லத்தேவையில்லை. அதுபோலத்தான், மண்ணு காலத்தில், RGF
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
04-அக்-202114:16:01 IST Report Abuse
vpurushothaman திருவாரூர்த் தேர்க்காரர் இதில் வரமாட்டாரா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X