பொது செய்தி

தமிழ்நாடு

புழல், அம்பத்துாருக்கு கிடைக்குமா? மெட்ரோ ரயில் திட்டத்தின் பலன்கள்

Added : அக் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மாதவரம் : மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப்பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், அவற்றின் பயன்பாடு மாதவரத்திற்கு அருகிலுள்ள புழலுக்கும், திருமங்கலம் அருகிலுள்ள அம்பத்துாருக்கும் கிடைக்க வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னையில் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் கடன் உதவியுடன் வேகமெடுக்குமென, அதற்கான

மாதவரம் : மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப்பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், அவற்றின் பயன்பாடு மாதவரத்திற்கு அருகிலுள்ள புழலுக்கும், திருமங்கலம் அருகிலுள்ள அம்பத்துாருக்கும் கிடைக்க வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சென்னையில் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் கடன் உதவியுடன் வேகமெடுக்குமென, அதற்கான அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.வளர்ச்சிஇந்நிலையில், சென்னை மாதவரம் பால்பண்ணையில் இருந்து மூலக்கடை, செம்பியம், கீழ்ப்பாக்கம், சோழிங்கநல்லுார் வரை, 47 கி.மீ., துாரத்திற்கு திட்டப்பணிகள் துவங்கி நடக்கின்றன.மேலும், மாதவரம் பால்பண்ணையில் இருந்து மற்றொரு தடமாக, வேணுகோபால் நகர், அசிசி நகர், மஞ்சம்பாக்கம் வழியாக, மாதவரம் ரெட்டேரி, பெரம்பூர், கொளத்துார், வில்லிவாக்கம், கோயம்பேடு, ஆழ்வார் திருநகர் வரையிலும் செல்கிறது.

இந்நிலையில், சென்னையை ஒட்டிய புழல், செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட, திருவள்ளூர் மாவட்ட பகுதிகள், நல்ல குடிநீர், காற்று மற்றும் வண்டலுார் - -மீஞ்சூர் வெளிவட்ட சாலை ஆகியவற்றால், வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. அங்கு வசிக்கும் மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்காக சென்னைக்குச் சென்று வருவது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆனால், அவர்களுக்கு சொந்த வாகனம், அரசு பேருந்து போக்குவரத்து மட்டுமே உதவுகிறது. ரயில் போக்குவரத்து கிடையாது.அதே போன்று, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் இருந்து ஆவடி, அம்பத்துார் வழியாக, பெரும்பாலான மக்கள், அன்றாட பணிகளுக்காக சென்னைக்கு வந்து செல்கின்றனர். மாநகர பேருந்து போக்குவரத்து வசதி இருந்தும், சாலை ஆக்கிரமிப்பு, நெரிசல் ஆகியவற்றால் காலதாமதம் தொடர்கிறது. மேலும் அவர்களுக்கு, சென்னை வரை புறநகர் ரயில் போக்குவரத்து கிடைத்தாலும், குறித்த நேரத்தில் சென்று வர, மேம்படுத்தப்பட்ட வசதியின்றி தவிக்கின்றனர்.

நீட்டிக்கலாம்இந்நிலையில், திருமங்கலம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை அம்பத்துார் வரை நீட்டிக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதனால் திருவள்ளூர் மாவட்டத்தினர் மட்டுமின்றி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட முகப்பேர், அம்பத்துார், கொரட்டூர் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்தவர்களும் பயனடைவர்.அதே போன்று மாதவரம் வரை கிடைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் புழல் வரை நீட்டிக்கப்பட்டால், திருவள்ளூர் மாவட்டத்தின் மற்ற பகுதியினருக்கும் உதவும்.எனவே, மாதவரத்தில் இருந்து புழல் வரை, 5 கி.மீ., திருமங்கலத்தில் இருந்து அம்பத்துார் வரை, 5 கி.மீ., என கூடுதலாக, 10 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டப்பணியை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
04-அக்-202109:36:11 IST Report Abuse
venkatan தென் சென்னையை விட வட சென்னை தொழில் ரீதியாகவும்,குடியிருப்பு பகுதிகள் அதிகம் இருப்பதால் திருவள்ளுவர், ஆவடி, அம்பத்தூர், புழல் செங்குன்றம் போன்ற பகுதிகளையும் வட்டப்பாதையாக சென்னை நகர்ப்புரத்தை இணைக்க வேண்டும். தற்சமயம் அம்பத்தூர் பகுதி சென்னை பெரு மாநகரப்பகுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X