பொது செய்தி

தமிழ்நாடு

கமிஷனர் அலுவலக எல்லை விரிவாக்கத்திற்கு ஆய்வு

Added : அக் 04, 2021
Share
Advertisement
புழல் : புதிய கமிஷனர் அலுவலக எல்லை விரிவாக்கம் குறித்து, சிறப்பு அதிகாரி சந்தீப் ராய் ரத்தோர் ஆய்வு செய்தார்.சென்னையில், ஆவடி மற்றும் தாம்பரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய கமிஷனர் அலுவலகம் அமைக்கும் பணி வேகமெடுத்துள்ளது. அதற்கான பணிகளை மேற்கொள்ள, கூடுதல் டி.ஜி.பி.,க்கள் ரவி மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆவடி புதிய

புழல் : புதிய கமிஷனர் அலுவலக எல்லை விரிவாக்கம் குறித்து, சிறப்பு அதிகாரி சந்தீப் ராய் ரத்தோர் ஆய்வு செய்தார்.

சென்னையில், ஆவடி மற்றும் தாம்பரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய கமிஷனர் அலுவலகம் அமைக்கும் பணி வேகமெடுத்துள்ளது. அதற்கான பணிகளை மேற்கொள்ள, கூடுதல் டி.ஜி.பி.,க்கள் ரவி மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆவடி புதிய கமிஷனர் அலுவலகத்தின் கீழ் அண்ணாநகர், அம்பத்துார், மாதவரம், வண்ணாரப்பேட்டை ஆகிய நான்கு காவல் மாவட்டங்கள் அடங்கும். ஆனாலும், சென்னையை ஒட்டிய திருவள்ளூர் மாவட்டத்தின் சில காவல் நிலையங்களும், புதிய கமிஷனர் அலுவலகத்தின் கீழ் இணைக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நேற்று மதியம் 12:30 மணியளவில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யும், சிறப்பு அதிகாரியுமான சந்தீப் ராய் ரத்தோர், புழல் காவல் நிலையத்திற்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளை சந்தித்தார். அதைத் தொடர்ந்து, புழலில் இருந்து சோழவரம் மற்றும் மீஞ்சூர் காவல் நிலைய எல்லைகளை 1 மணி நேரம் ஆய்வு செய்தார். இதேபோல் ஆவடி மற்றும் அம்பத்துாரிலும் ஆய்வு செய்தார். அவரை, அந்தந்த பகுதி போலீஸ் அதிகாரிகள் வரவேற்றனர். அவர்களிடம், சில நிமிடம் விபரங்கள் கேட்டறிந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X