பொது செய்தி

தமிழ்நாடு

ராயப்பேட்டை மெட்ரோ சுரங்க நிலையம் ஆரம்ப கட்ட பணிகள் துவக்கம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
சென்னை : ராயப்பேட்டையில், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இடம் கையகப்படுத்தப்பட்டு, ஆரம்ப கட்ட பணிகள் துவங்கின.மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், 61 ஆயிரத்து 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.50 நிலையங்கள்இத்திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்படுகிறது. இப்பாதையில், 50

சென்னை : ராயப்பேட்டையில், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இடம் கையகப்படுத்தப்பட்டு, ஆரம்ப கட்ட பணிகள் துவங்கின.மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், 61 ஆயிரத்து 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.

50 நிலையங்கள்இத்திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்படுகிறது. இப்பாதையில், 50 நிலையங்கள் கட்டப்பட உள்ளன. இதில், 20 நிலையங்கள் தரைக்கு மேல், சிமென்ட் துாண்களில் பாலம் அமைத்தும், சுரங்கத்தில், 30 நிலையங்களும் கட்டப்பட உள்ளன.இத்திட்டதில், முதல்கட்டமாக, மாதவரம் - சிறுசேரி சிப்காட் பாதையில், மாதவரம் - தரமணி இணைப்பு சாலை வரை, 35.67 கி.மீ., துாரமும், மாதவரம் - சோழிங்கநல்லுார் பாதையில், மாதவரம் - சி.எம்.பி.டி., இடையே 16.34 கி.மீ., என, மொத்தம், 52.01 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது.ஆயத்த பணிகள்இப்பாதை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள், பல பிரிவுகளாக முன்னரே துவங்கப்பட்டு, துரிதமாக நடந்து வருகிறது. இப்பாதையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை எதிரே, மெட்ரோ நிலையம் சுரங்கத்தில் கட்டப்பட உள்ளது.

இதற்காக, 239 சதுர மீட்டர் இடம், ஒய்.எம்.சி.ஏ., அறக்கட்டளையிடம் வாங்கப்பட்டு, கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்தில், இரண்டு மாடி கட்டடத்தில், முதல் தளத்தில் ஒன்பது அறைகளும், தரைத்தளத்தில், ஏழு கடைகளும் இருந்தன. நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதால், மெட்ரோ நிறுவனத்தால், இந்த கட்டடம் இடிக்கப்பட்டு, சுரங்க நிலையம் அமைக்க ஆயத்த பணிகள் துவங்கப்பட்டுள்ளன.நிலையம் கட்டுவதற்கு விரைவில் பள்ளம் தோண்டப்பட்டு, தேவையான அளவு பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, சுரங்க நிலையம் அமைக்கும் பணி துவக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X