பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சூழலை பாதுகாக்க இலவச மரக்கன்றுகள்: மாசில்லா சின்னமனூர்

Added : அக் 04, 2021
Share
Advertisement
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க வேண்டுமென்றால் அதிகளவில் மரங்கள் நடவு செய்வதோடு, பாலிதீன், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.ஆனால் கடைகளில் இன்னமும் பாலிதீன் பைகள் புழக்கத்தில் உள்ளன. பிளாஸ்டிக் உபயோகமும் தொடர்கிறது. இதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.நாம் வசிக்கும் பகுதியை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். வீடுகளில் இடம் இருந்தால் மரங்கள், செடிகள்,காய்கறித்

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க வேண்டுமென்றால் அதிகளவில் மரங்கள் நடவு செய்வதோடு, பாலிதீன், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.ஆனால் கடைகளில் இன்னமும் பாலிதீன் பைகள் புழக்கத்தில் உள்ளன. பிளாஸ்டிக் உபயோகமும் தொடர்கிறது. இதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

நாம் வசிக்கும் பகுதியை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். வீடுகளில் இடம் இருந்தால் மரங்கள், செடிகள்,காய்கறித் தோட்டம் அமைக்கலாம். இடம் இல்லாதவர்கள் மாடித்தோட்டம் அமைக்கலாம். நாம் குடியிருக்கும் பகுதியை சுத்தமாக வைக்க ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும்.துணிப்பைகளை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்குவதன் மூலம், பாலிதீன் பயன்பாட்டை குறைக்கலாம்.மேலும் சின்னமனுாரில் சேகரமாகும் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் சரிவர செயல்படுத்தப்படவில்லை. மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து கொடுத்தாலும் மக்கும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கவில்லை. மெயின்ரோட்டில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்,. மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தாவர வகைகளை பொதுமக்கள் வீடுகளில் வளர்க்கும் வகையில் நகராட்சி இலவசமாக வழங்க முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X