பொது செய்தி

தமிழ்நாடு

விருதுநகரில் மாவட்ட பேச்சு போட்டி

Added : அக் 04, 2021
Share
Advertisement
விருதுநகர் : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் பள்ளி அளவில் ந.சுப்பையாபுரம் அரசு பள்ளி, கல்லுாரி அளவில் சிவகாசி அரசு கல்லுாரி முதல் பரிசை பெற்றது.பல்வேறு தலைப்புகளில் நடந்த இப்போட்டியில் 109 பள்ளி மாணவர்களும் 39 கல்லுாரி மாணவர்களும் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களுக்கு நடுவர்களாக தமிழ்

விருதுநகர் : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் பள்ளி அளவில் ந.சுப்பையாபுரம் அரசு பள்ளி, கல்லுாரி அளவில் சிவகாசி அரசு கல்லுாரி முதல் பரிசை பெற்றது.பல்வேறு தலைப்புகளில் நடந்த இப்போட்டியில் 109 பள்ளி மாணவர்களும் 39 கல்லுாரி மாணவர்களும் பங்கேற்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு நடுவர்களாக தமிழ் ஆசிரியர்கள் ராமர், ராஜசேகர், வேல்முருகன் செயல்பட்டனர்.சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராஜா ஒருங்கிணைத்தார். கல்லுாரி மாணவர்களுக்கு நடுவர்களாக பேராசியர்கள் கிளிராஜ், ஸ்ரீதர், எழுத்தாளர் நீலநிலா செண்பகராஜன் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சுசீலா செய்தார்.பள்ளி மாணவர்களில் ந.சுப்பையாபுரம் அரசு பள்ளி மாணவி வேணீஸ்வரி முதல் பரிசு, ராஜபாளையம் நாடார் பள்ளி மாணவன் பொன்சரவணகுரு 2ம் பரிசு, ஸ்ரீவி.,ம.நா.ரா.தேசிய பெண்கள் பள்ளி மாணவி பொன்நந்தினி 3ம் பரிசு , சிறப்பு பரிசை ஆவடையாபுரம் அரசு பள்ளி மாணவி மாரீஸ்வரி, நடுவப்பட்டி அரசு பள்ளி மாணவி காளீஸ்வரி பெற்றனர்.கல்லுாரி மாணவர்களில் சிவகாசி அரசு கல்லுாரி மாணவன் அப்துல் ஹாதி முதல் பரிசு, பி.எஸ்.ஆர்.,பொறியியல் கல்லுாரி மாணவர் நெல்லையப்பராஜா 2ம் பரிசு , அருப்புக்கோட்டை சைவபானு ஷத்தரிய கல்லுாரி மாணவி ரமணி 3ம் பரிசு பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X