சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோத புகார்; போலீஸ் விசாரணை

Added : அக் 04, 2021
Share
Advertisement
தேனி : மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன்னாள் தலைவர் மீதான புகார் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சின்னமனுார் வழக்கறிஞர் ஜெகன்ராஜ் மீது மானாமதுரை போலீசில் பெண் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீரபாண்டி போலீசில் அவர் அளித்த புகார் மனு:முன் விரோதத்தால் மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன்னாள் தலைவர் சுரேஷ்குமார் கொலை மிரட்டல் விடுத்தார். அரசு வாகனம், அரசு

தேனி : மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன்னாள் தலைவர் மீதான புகார் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சின்னமனுார் வழக்கறிஞர் ஜெகன்ராஜ் மீது மானாமதுரை போலீசில் பெண் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீரபாண்டி போலீசில் அவர் அளித்த புகார் மனு:முன் விரோதத்தால் மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன்னாள் தலைவர் சுரேஷ்குமார் கொலை மிரட்டல் விடுத்தார். அரசு வாகனம், அரசு முத்திரையை தவறாய் பயன்படுத்துகிறார். கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ்குமார் போலீசாரிடம் வழங்கிய புகாரில், நான் பணியில் இருந்தபோது பயன்படுத்திய புகைப்படங்கள், அரசு முத்திரைகள் உள்ளிட்டவற்றை நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் முகநுாலில் ஜெகன்ராஜ் அவதுாறு பரப்புகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியுள்ளார். புகார்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கக்கோரி எஸ்.பி.,பிரவீன் உமேஷ் டோங்ரேக்கு வீரபாண்டி போலீசார் பரிந்துரைக்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X