பொது செய்தி

இந்தியா

ஓட்டல்களில் புகை தடுக்க அரசு உத்தரவு

Added : அக் 04, 2021
Share
Advertisement
பெங்களூரு : மதுபான பப், பார்கள், ஓட்டல் போன்ற இடங்களில், புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை கடுமையாக்க, அரசு ஆலோசிக்கிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.பப்கள், பார்கள், ஓட்டல் போன்ற இடங்களில் புகை பிடிப்பதால், அங்கு வருவோருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். அதுமட்டுமின்றி கொரோனா பரவும் அபாயம் உள்ளது என, சுற்றுச்சூழல்

பெங்களூரு : மதுபான பப், பார்கள், ஓட்டல் போன்ற இடங்களில், புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை கடுமையாக்க, அரசு ஆலோசிக்கிறது.

இது குறித்து அதிகாரிகளுக்கு, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.பப்கள், பார்கள், ஓட்டல் போன்ற இடங்களில் புகை பிடிப்பதால், அங்கு வருவோருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். அதுமட்டுமின்றி கொரோனா பரவும் அபாயம் உள்ளது என, சுற்றுச்சூழல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். எனவே புகை பிடிக்க தடை சட்டத்தை இந்த இடங்களில் கடுமையாக அமல்படுத்தும்படி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

புகையிலை பொருட்களை கட்டுப்படுத்தும் உயர் அதிகார கமிட்டி உறுப்பினர் விஷால் ராவ், முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:கொரோனா 3வது அலை பீதி உள்ளது. எனவே பார்கள், ஓட்டல், பப்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை, கடுமையாக செயல்படுத்த வேண்டும்.புகை பிடிப்பவர்கள் வெளியேற்றும் புகையால், அவர்களுக்கு மட்டுமின்றி, மற்றவர்களையும் பாதிக்கிறது. சிகரெட் புகைப்பவர்கள் முக கவசம் அணிவதில்லை. இதனால் கொரோனா தொற்று, ஒருவருக்கொருவர் பரவும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X